பீகாரின் அரசியல் முகங்களாக கருதப்படும் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருமே, மாநிலத்தின் முன்னோடியாக கருதப்படும் கர்பூரி தாக்கூரிடம் அரசியல் பயின்றவர்கள் ஆவர். கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சரானார்.

ஆனால், போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாததால், ஒரே வாரத்தில் அவரது ஆட்சி பறிபோனது. ஆனாலும், 2004 ஆம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷ் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனாலும், வாஜ்பாயி அரசாங்கத்தில் மத்திய அமைச்சர் பதவி வகித்தார்.

முதல் முறை முதலமைச்சர் பதவி

கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜக முறையே 88 மற்றும் 55 தொகுதிகளை கைப்பற்றின. இதனால், கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார் முதல்முறையாக பீகார் மாநில முதலமைச்சரானார். அதன் பிறகு தொடர்ந்து நேரத்திற்கு ஏற்றவாறு கூட்டணியை மாற்றி அமைத்து முதலமைச்சர் நாற்காலியை தக்க வைத்து வந்தார். இடையில் 2013 ஓராண்டு மட்டுமே முதலமைச்சர் பதவியில் இல்லாமல் இருந்து வந்தார். ஆனால் இவ்வளவு நாட்கள் முதலமைச்சராக இருக்கும் நிதீஷ்குமார் ஒருமுறை கூட சட்டமன்ற உறுப்பினராக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏவுக்கு நிற்காத நிதிஷ்

இதுவரை 9 வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்று இருந்தாலும், கூட ஒருமுறை மட்டுமே எம்எல்ஏவாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு கடந்த 35 ஆண்டுகளாக நிதிஷ் குமார் எம்எல்ஏ ஆகாமலே முதல்வர் பதவியை வகித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம், பீகாரில் மேலவை உறுப்பினர் பதவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் சட்டசபை மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களை மேலவை உறுப்பினர் என்ற பதவி இருக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்பட மாநிலங்களில் உள்ளது. இவ்வாறு மேலவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார். அவ்வாறு தொடர்ந்து நித்திஷ் குமார் ஒவ்வொரு முறையும் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.