விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பிக்பாஸ். இந்த ரியாலிட்டி ஷோவிற்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் வியானா:

இறுதிக்கட்டத்தை பிக்பாஸ் எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். வியானா, வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் வந்திருந்தனர். வியானா வீட்டின் உள்ளே இருந்தபோதே அவருக்கும் சான்ட்ராவிற்கும் இடையே கருத்து மோதல் இருந்தது.

டிராமா குயின்:

இந்த சூழலில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த வியானா சக போட்டியாளர் கானா வினோத் மற்றும் திவ்யாவிடம் சான்ட்ரா பற்றி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, இந்தம்மா நல்லா சீரியல் நடிச்சு டிராமா பண்ணி பண்ணி எல்லாரையும் அனுப்பி விடுவாங்க. அனுப்பிவிட்டு குத்துக்கல்லாக உக்காந்து இருப்பாங்க. நீ இந்த வீட்டிற்கு உள்ளே ஒன்று பார்க்கிற. வீட்டிற்கு வெளியே ஒன்னு பாத்தா.

இவ்வாறு அவர் கூறினார்.

#Viyana Polanthufying #Scamdra & #Prajean :

"Ivar Mandhiri na ava Mundhiri..Ava Mundhiri na ivar Mandhiri.." 😂😂😂🤣

Drama queen..Oor Kizhavi.🔥🔥😂🤣

Perutha Avamanam..Ponnu Vechi Seira..🔥💥#VJPaaru & #Kamrudin Fans Enjoy Pannunga.#BiggBossTamil9 #BiggBoss9Tamil pic.twitter.com/WlDDVMthrZ

— Imran (@Losliya16) January 6, 2026

ஊர்க்கிழவி:

அப்போது, திவ்யா அடுத்து பிரஜன் வருவார் என்று நினைக்கிறேன் என்று கூறினார். அப்போது பேசிய வியானா, அவர் என்ன இவரா? எல்லாமே பில்டப்தான். உள்ள வெத்துப் பட்டாசுதான். வெளியதான் சும்மா டுமீல், டுமீல்னு. அவர் மந்திரினா இவங்க முந்திரி. இவங்க முந்திரினா அவர் மந்திரி. இரண்டுமே வெத்துப் பட்டாசுதான். டிராமா குயின், ஊர்க்கிழவி என்றார். மேலும், தாய்க்கிழவி பாடலை ஊர்க்கிழவி, ஊர்க்கிழவி என்று பாடியும் சான்ட்ராவை கிண்டல் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக சான்ட்ரா, பிரஜன் உள்ளே வந்தனர். அவர்கள் சக போட்டியாளர்களுடன் சண்டையிட்டனர். பிரஜன் வெளியேறிய நிலையில் சான்ட்ரா போட்டியாளராக உள்ளே நீடித்து வருகிறார். ஆனாலும், அவர் அழுது நடிப்பதாக பலரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

மேலும், போட்டியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியையும் இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த சீசன் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.