BIg Boss Tamil 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில்.. எஸ்டிஆர் பட நடிகரும் இருக்காராம்.. செம சர்ப்ரைஸ்!

3 months ago 4
ARTICLE AD

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 9 நிகழ்ச்சி தொடங்கும் முன்பே களைகட்ட தொடங்கிவிட்டது. நடக்க இருக்கும் 9ஆவது சீசனில் யார் யாரெல்லாம் கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மாபெரும் ஹிட் அடித்தது. இந்த நிகழ்ச்சியில் 16 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்க வேண்டும். அவர்களை சுற்றி 60 கேமராக்கள் முன்னர் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் வாழ வேண்டும். அப்பொழுது நடக்கும் சண்டைகளும், அவர்களுடைய உறவுகளும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியை பார்த்த மக்கள் அனைவரும் ஒரு சீரியலுக்கு இணையாக பேசி விவாதங்களை ஏற்படுத்தினர். இந்தியில் ஹிட் ஆன பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு தென்னிந்திய மொழிகளிலும் தொடங்கப்பட்டது. அவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தாெகுத்து வழங்கினார். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற வசனங்களும் மக்களிடையே பிரபலம் அடைந்தது. தமிழில் இதுவரை எட்டு சீசன்கள் முடிந்திருக்கிறது. முதல் ஏழு சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் விஜய் சேதுபதி எட்டாவது சீசனை தொகுத்து வழங்கினார். வீட்டில் நடக்கும் ஒரு விஷயத்தை கமல்ஹாசன் அமைதியாக கேட்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், விஜய் சேதுபதி ரசிகர்கள் எதிர்பார்ப்பை காட்டிலும் அடாவடியாக பேசி போட்டியாளர்களை கதிகலங்க வைத்தார். சில நேரங்களில் கமலை போன்று இல்லை எனவும் விமர்சனம் செய்தனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9ஆவது சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிக்கான ஆடிசன் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரபலங்களின் பெயர்கள் கசிந்துள்ளது. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் இருந்து 2 பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவது வழக்கம். அந்த வகையில் குக் வித் கோமாளி போட்டியாளராக வரும் ஷபானா என்ட்ரி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதே போன்று விஜய் டிவி பிரபலங்களான நேஹா, அஃசிதா அசோக், வினோத் பாபு உள்ளிட்ட பிரபலங்களும் இந்த ஆடிஷனில் கலந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிம்புவுக்கு நெருக்கமான நண்பராக இருக்கும் நடன இயக்குநர் சதிஷ் இந்த சீசனில் உள்ளே வர வாய்ப்புள்ளது.

Read Entire Article