Bengaluru Power Cut : சண்டேவும் மின் தடையா.. பெங்களூர் நகரில் நாளை(08-02-2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்

2 months ago 9
ARTICLE AD

பெஸ்காம் எனப்படும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் பெங்களூருவில் நாளை மிகப்பெரிய மின் தடையை அறிவித்துள்ளது.

இதன்படி பெங்களூரு, தாலுகாக்கள் மற்றும் நகர் பகுதிகளிள் 7 மணி நேரத்துக்கு மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான பராமரிப்புப் பணி காரணமாகவே இந்த மின் தடை என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. குடி மக்கள், தேவையான சமாளிப்புகளை மேற்கொண்டு ஒத்துழைப்பை வழங்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் சந்தாபூர் பிரிவு உட்பட்ட முக்கிய பகுதிகளில், காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சாரம் இருக்காது என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் மின் தடை?

காந்திநகர்  பகுதி: காந்திநகர், சேஷாத்ரி சாலை, ஆனந்த ராவ் வட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் முக்கிய சாலைகள்.

சேஷாத்ரிபுரம் பகுதி: சேஷாத்ரிபுரம், குமார பார்க் கிழக்கு, சிவானந்தா பூங்கா மற்றும் கிரசன்ட் சாலை.

அரசு அலுவலகங்கள்:

காவேரி பவன், கனிஜா பவன், கண்டயா பவன், கர்நாடகா வீட்டு வாரியம் (KHB) மற்றும் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) போன்ற முக்கிய அரசு அலுவலகங்களின் அலுவலகப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது

பொதுமக்கள் கவனத்திற்கு:

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம்.

மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும்.

மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைப் பயன்படுத்த வேண்டும்.

பெங்களூரு மாநிலத்தைப் பொறுத்தவரை, திட்டமிடப்பட்ட மின் தடை குறித்த கூடுதல் தகவல்கள் அல்லது லேட்டஸ்ட் விவரங்களை, http://bescom.karnataka.gov.in என்ற இணைய முகவரி மூலம் பெறலாம். அதேபோல 1912 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைத்தும் மின் தடை பெறலாம்.

Read Entire Article