Bear Video: குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடியால் பரபரப்பு!

1 year ago 7
ARTICLE AD
நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டெருமைகள் அதிக அளவில் பகல் மற்றும் இரவு வேலைகளில் நகரப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதியில் உலா வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு குன்னூர் அருகே உள்ள சேலாஸ் நேரு நகர் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்வதாக குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் தீ பந்தங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று கரடியை விரட்டும் பணியில் தீவிரம் காட்டினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரடியை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Read Entire Article