Baakiyalakshmi serial August 20 : ராதிகாவுக்கு கோபிக்கும் சண்டை.. அடுத்த பங்ஷனுக்கு ரெடியான பாக்கியலட்சுமி குடும்பம்...

1 year ago 7
ARTICLE AD

Baakiyalakshmi Serial August 20 :  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய (ஆகஸ்ட் 20 ) எபிசோடில் எழில் பற்றிய கவலையுடன் வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் பேச வேண்டும் என சொல்கிறார். ஆனால் ராதிகாவோ கோபி பேசுவது எதையும் காதில் வாங்காதது போல் இருக்கிறாள். "ஏதாவது சொல்லனும்னா சொல்லுங்க இல்லாட்டி கிளம்புங்க" என திமிராக சொல்லி விட்டு சாப்பாட்டை கொண்டு வந்து வைக்கிறாள் ராதிகா.

அதை பார்த்து கடுப்பான கோபி "சாப்பிட மட்டும் வீட்டுக்கு வரது இல்ல. சாப்பாடு வேணும்னா வெளியிலேயே சாப்பிட்டு வந்து விடுவேன். அன்பா இரண்டு வார்த்தை நிம்மதியா பேசுறதுக்காக தான் வீட்டுக்கு வரது. வீட்டுக்கு வந்த கொஞ்சம் கூட  நிம்மதி இல்லை" என சொல்லி சாப்பாடு தட்டை தட்டி விடுகிறார் கோபி. அதை பார்த்து மயூ பயந்து போகிறாள். மயூ பயந்ததை பார்த்து கோபி சாரி கேட்கிறார்.

ஆனால் ராதிக்கவோ "இது மாதிரி நீங்க இனியா முன்னாடி பண்ணுவீங்களா? மயூ என்னோட பொண்ணு அதனால தான் இப்படி நடந்துக்குறீங்க?" என சத்தம் போட "ஏன் இப்படி பிரிச்சு பேசுற. என்னோட பசங்கள நான் எப்படி பாக்குறேனோ அதே போல தான் நான் மயூவையும் பார்க்கிறேன். அவ உன்னோட பொண்ணுனா அப்போ நான் அவளுக்கு யாரு?" என சண்டை போட இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. தட்டி விட்ட சாப்பாடு தட்டு அப்படியே கிடக்கிறது. காலையில் எழுந்து பார்த்தால் அப்பவும் அந்த தட்டு கிளீன் பண்ணாமல் அங்கேயே கிடக்கிறது. அதை பார்த்து கோபி சங்கடப்பட்டு பாக்கியா எப்படி கோபியை கவனித்து கொண்டாள் என்பதை நினைத்து பார்க்கிறார். கோபி வெளியே சென்றதும் ராதிகா அந்த பிளேட்டை எடுத்து அந்த இடத்தை கிளீன் செய்கிறாள்.

செழியன் வாக்கிங் போகும் போது எதிரில் வந்த ஒருவர் எழில் பற்றி விசாரிக்க செழியன் எழிலுக்கு போன் பண்ணி பேசுகிறான். "வீட்ல எல்லாரும் உங்களை மிஸ் பண்ணறாங்க. நிலா, அமிர்தா எப்படி இருக்காங்க. வீட்டுக்கு திரும்பவும் வந்துடுடா. நான் எது சொன்னாலும் அதை கேட்க கூடாது என்ற முடிவில் இருக்க இல்ல" என செழியனை சொல்ல "அதெல்லாம் வேணாம்டா. யாராவது கேட்டா நான் ஃபாரீன் போயிட்டேன் என சொல்லிடு. உனக்கு மறுபடியும் குழந்தை பிறக்க போகுது. அதை நினச்சு நீ சந்தோஷமா இரு" என சொல்லிவிட்டு சமாளிப்பதற்காக வேற வேலை இருக்கு நான் அப்புறமா கூப்பிடுறேன் என சொல்லி போனை வைத்து விடுகிறான் எழில்.

அப்போது கோபி வாக்கிங் வர செழியனை சந்திக்கிறார். இருவரும் எழில் பற்றி பேசி கொள்கிறார்கள். "எழிலுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேளு. நான் குடுத்தேன்னு சொல்லாம நீ கொடுத்ததா அவனுக்கு குடு செழியா" என்கிறார் கோபி. "இல்லபா அவன் அதெல்லாம் வாங்கிக்க மாட்டேன்" என்கிறாள் செழியனை. கோபி கிளம்ப அவரை அழைத்து குழந்தை பிறக்க போவது பற்றியும் ஜெனி கர்ப்பமாக இருப்பது பற்றியும் செழியன் சொல்ல அதை கேட்டு கோபி சந்தோஷப்படுகிறார்.

அடுத்த நாள் காலை மயூ கவலையுடன் இருக்க ராதிகா என்ன நடந்தது என விசாரிக்கிறாள். அப்பாவும் நீங்களும் சண்டை போடுறது கஷ்டமா இருக்கு என மயூ சொல்ல இனி நான் அப்பா கூட சண்டை போட மாட்டேன் என ராதிகா மயூவிடம் சொல்கிறாள்.

பாக்கியா வீட்டில் அனைவரும் தாத்தாவின் பிறந்தநாளுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். பாக்கியா சிம்பிளாக கோயிலில் செய்யலாம் என சொல்கிறாள், செழியனும் ஜெனியும் மண்டபத்தில் பண்ணலாம் என சொல்ல பாக்கியா இது பற்றி பாட்டியிடம் கேட்டு விட்டு வருகிறேன் என சொல்லி ஈஸ்வரி ரூமுக்கு போகிறாள். மாமா பிறந்தநாளை சொந்த பந்தங்களுக்கு சொல்லி கோயிலில் வைத்து கொண்டாடலாம் என முடிவு எடுத்து இருக்கோம். நீங்க என்ன சொல்றீங்க என கேட்கிறாள். இது தான் இன்றைய எபிசோட் கதைக்களம்.

Read Entire Article