ஊட்டச்சத்து மிகுந்த அவகடோ ப்ரியரா? இதோ, பனீர், அவகடோ வைத்து சப்பாத்தி செய்து லன்ச், இரவு உணவு என எளிதாக செய்து முடித்துவிடலாம்.

அவகடோ ரொட்டி

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு அல்லது மல்டி க்ரெயில் மாவு - இரண்டு கப்

இளஞ்சூடான நீர் - ஒரு கப்

பனீர் - 300 கிராம்

அவகடோ - 1

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் பனீர்,தோல் நீக்கிய அவகடோ உடன் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துகொள்ள வேண்டும்.

கோதுமை மாவில் அரைத்த அவகடோ விழுது, உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். பால், நெய் சேர்க்கலாம்.

தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி செயவ்தற்காக உருட்டி, மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் அவகடோ ரொட்டியை போட்டு இரு புறமும் பொன்னிறமாகும் வரை வேக விடவும். இதை எண்ணெய் சேர்க்காமலும் செய்யலாம்.

இதோடு, தயிர், புதினா சட்னி, தக்காளி தொக்கு உள்ளிட்டவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும்.

முருங்கைக்கீரை பராத்தா செய்முறை:

கோதுமை மாவில் வேக வைத்து அரைத்த பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். இதில் பால், நெய் சேர்க்கலாம்.

ஸ்டஃப்பிங்கிற்கு முருங்கைக்கீரையை கொஞ்ச நேரம் வேக வைத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.

தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி செயவ்தற்காக உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.

மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

சுட சுட பாலக் முருங்கைக்கீரை பராத்தா, தயிர், நறுக்கிய வெங்காயம், சேர்த்து சாப்பிடலாம்.

அடை செய்யும்போது அதில் முருங்கைக்கீரை சேர்ப்பது மிகவும் நல்லது.