Assembly Election 2026: 3 மாநிலங்களில் முடிந்த வாக்குப்பதிவு; புதுச்சேரி, கேரளா, அசாமில் எத்தனை சதவீதம்?

4 days ago 2
ARTICLE AD

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. சில வாக்குச் சாவடிகளில் மட்டும், வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு, வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் எப்படி?

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் போட்டியிட 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 86.92 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

அசாம் மாநிலத்தில் 84.42 சதவீத வாக்குகளும் கேரள மாநிலத்தில் 75.01 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில் 6 மணி நிலவரப்படி, 3 மாநிலங்களிலும் வாக்குப் பதிவு சராசரியாக 80 சதவீதத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் எப்படி?

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக, நாதக ஆகிய அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article