Arjun Tendulkar: நேத்து கல்யாணம்.. இன்று மைதானம்.. சின்னவரின் அர்ப்பணிப்பு.. வைரல் வீடியோ

1 month ago 5
ARTICLE AD

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், வியாழக்கிழமை (மார்ச் 5) சானியா சந்தோக்கை மணந்தார். திருமணமான மறுநாளே, அர்ஜுன் கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

திருமணத்திற்கு மறுநாளே கிரிகெட்

அர்ஜுன் டெண்டுல்கர் தனது திருமணத்திற்கு மறுநாளே,  மார்ச் 6-ம் தேதி  அன்று நடைபெற்ற டி.ஒய். பாட்டீல் கோப்பையின் 2026  அரையிறுதிப் போட்டியில் டி.ஒய். பாட்டீல் புளூ (DY Patil Blue) அணிக்காக விளையாடினார். மும்பை கஸ்டம்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் அர்ஜுனின் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அர்ஜுனின் ஆட்டமும் பெரிய அளவில் சோபிக்கவில்லை; அவர் பேட்டிங்கில் 14 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார், பந்துவீச்சில் ஒரு ஓவரில் 20 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

திருமணத்திற்கு முந்தைய நாளும் மைதானத்தில்...

அர்ஜுன் தனது திருமணத்திற்கு முந்தைய நாள் கூட ஒரு போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 4-ம் தேதி இன்கம் டேக்ஸ் (Income Tax) அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் அவர் விளையாடினார். இவ்வாறு தனது திருமணத்திற்கு முன்னும் பின்னும் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம், கிரிக்கெட் மீதான தனது அதீத ஆர்வத்தை அர்ஜுன் நிரூபித்துள்ளார்.

अर्जुन तेंदुलकर की शादी कल हुई और आज मैदान में मैच खेल रहे हैं।

सलाम इस जुनून को 🫡 pic.twitter.com/1FUxgaGVFK
— Ocean Jain (@ocjain4) March 6, 2026

மகனின் திருமணத்தால் நெகிழ்ந்த சச்சின் டெண்டுல்கர்

தனது மகன் அர்ஜுனின் திருமணத்தைப் பற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர், "அர்ஜுனும் சானியாவும் தங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்கும்போது, அனைவரின் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நாங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் வருகையும், வாழ்த்துச் செய்திகளும் இந்தத் திருமணத்தை எங்கள் குடும்பத்திற்கும், குறிப்பாக இந்தத் தம்பதிக்கும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றியுள்ளது. மிக்க நன்றி," என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

As Arjun and Saaniya begin this new chapter together, we feel incredibly grateful for the love and blessings pouring in from everyone. Your presence, messages, and heartfelt wishes have made this wedding a truly unforgettable occasion for the family and, most importantly, for the…
— Sachin Tendulkar (@sachin_rt) March 6, 2026

அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் ஆகியோரின் திருமணம் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கிரிக்கெட், அரசியல் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Read Entire Article