மத்திய மாநில அரசின் கல்வி திட்டங்கள்

மத்திய மாநில அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசிலும் , மாநில அரசிலும் வேலைவாய்ப்பு குவிந்து கிடக்கிறது. மேலும் ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற்பழகுநராக வாய்ப்பையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் மாதம் 18ஆயிரம் ரூபாய் உதவித்தொகையோடு Apprenticeship பயிற்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொழிற் பழகுநர் பயிற்சி

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு தொழிற்பிரிவுகளை சேர்ந்த பயிற்சியார்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) 10.06.2026 9.30 மணியளவில் வட சென்னை-32 ஆர்.கே.நகர். அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (வட சென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது.

18 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை

இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற்பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) மற்றும் மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.8000/- முதல் அதிகபட்சமாக ரூ.18000/-வழங்கப்படும்.

இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (NAC) முடிக்காத அரசு. தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in ού கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.