Annamalai: விஜய் கருத்து சரியில்லை! இன்னும் அறிவியல்பூர்வ தரவுகளை சொல்லலாம் - அண்ணாமலை கருத்து

1 year ago 7
ARTICLE AD
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வைத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, " ஒரு இடைத்தேர்தல் எவ்வாறு நடத்தப்பட கூடாது என்பதற்கு இலக்கணமாக விக்கிரவாண்டி தேர்தல் உள்ளது. இதையும் தாண்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை உள்ளது. தேர்தலில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்துக்கு செல்வோம் என பயந்து அதிமுக ஒதுங்கியுள்ளது. விஸ்வகர்மா யோஜனா கற்று தந்தால் அது குல கல்வி என திமுகவின் கூறுகிறார்கள். மீனவ பிள்ளைகளுக்கு கடல் சார் கல்வி குறித்து கற்று தந்தால் அது குல கல்வி இல்லையா?. விஜய் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதை வரவேற்கிறேன்" என்று கூறினார். அவர் பேசிய முழு விடியோ இதோ
Read Entire Article