Anbumani And LK Sudhish Property Value : எல்.கே.சுதீஷ், அன்புமணியிடம் இத்தனை கோடி இருக்கா.!! தலை சுற்ற வைக்கும் சொத்து பட்டியல் இதோ..

1 month ago 4
ARTICLE AD

ராஜ்யசபா தேர்தல்- வேட்புமனு தாக்கல்

மக்களின் நன்மைக்காக இரவும் பகலுமாக உழைத்து வரும் அரசியல் தலைவர்களின் சொத்து பட்டியலானது தேர்தலில் போட்டியிடும் போது வேட்புமனு தாக்கலின் இணைத்து தாக்கல் செய்யப்படும்.  அதில் தங்களிடம் உள்ள அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் பட்டியல் வெளியிடப்படும். மேலும் தங்கம் மீதுள்ள குற்ற வழக்குகளின் நிலவரத்தையும் பட்டியலாக தாக்கல் செய்வார்கள். அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ராஜ்யசபா தேர்தலானது வருகிற 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி சிவா, தம்பிதுரை, அன்புமணி, எல்.கே.சுதீஷ், கிறிஸ்டோர் திலக்,கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோரின் சொத்து பட்டியல் வெளியாகியுள்ளது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக)

திமுக சார்பாக போட்டியிடும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் 90 ஆயிரம் ரூபாயும், அவரது மனைவி சரோஜினியிடம் 50 ஆயிரம் ரூபாயும், அவரை சார்ந்து இருப்போரிடம் 1.25 லட்சம் ரூபாயும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் 15 சவரனும், மனைவியிடம் 75 சவரனும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் 105 சவரன் தங்க நகைகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார், மேலும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தனது பெயரில் 3.80 கோடி ரூபாய் அளவிற்கும், மனைவி சரோஜினி பெயரில் 1.43 கோடி ரூபாய் அளவிற்கும் அசையா சொத்து இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்)

அடுத்தாக காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கிறிஸ்டோபர் திலக் பெயரில் 9.22 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 1.07 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி சிவா (திமுக)

திமுக சார்பாக போட்டியிடவுள்ள திருச்சி சிவாவிற்கு அவரது வங்கி வைப்பு தொகை மற்றும் முதலீடுகள் என 2.18 கோடி ரூபாயும், குடும்பத்தினரின் பெயரில் 72.75 லட்சம் ரூபாயும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்  3.86 கோடி ரூபாய்க்கு நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களும், மனைவி மற்றும் குடும்பத்தினரின் பெயரில் 97 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் உள்ளதாகவும், வங்கி மற்றும் தனி நபர்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை மட்டும் 1.06 கோடி ரூபாய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன் மொத்த சொத்து மதிப்பு 7.75 கோடி ரூபாய் இருப்பதாகவும் திருச்சி சிவா தன் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தம்பிதுரை ( அதிமுக )

தம்பிதுரை மனைவியிடம் 3.04 கிலோ தங்கம், 30.60 கிலோ வெள்ளி உள்ளதோடு, 59.88 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்  மனைவி பெயரில் 15 கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் அவரின் மொத்த சொத்து 70.69 கோடி ரூபாயாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தம்பிதுரை, அவரின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் மூலம் ஆண்டுக்கு 1.02 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாகவும் தனது வேட்புமனுவில் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

அன்புமணி ( பாமக )

பாமக தலைவர் அன்புமணி, அவரது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் 68.17 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளதாகவும்,
மேலும் அன்புமணியிடம் 960 கிராம் தங்கமும், சவுமியாவிடம் 2,927 கிராம் தங்கம் இருப்பதாகவும் மற்றும் அன்புமணியின் மகளிடம் 551 கிராம் தங்கமும் உள்ளதாக கூறியுள்ளார். அன்புமணி மனைவி சவுமியாவிடம் 1.64 கோடி ரூபாய் மதிப்புள்ள 151 காரட் வைரம்,  மகளிடம் 4.34 லட்சம் மதிப்புள்ள வைரமும் உள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

சுதீஷ் ( தேமுதிக )

தேமுதிக பொருளாளர் சுதீஷிடம் 450 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் 4.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்களும் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். சுதீஷின் மனைவியிட ஒன்றரை கிலோ தங்கம், 2,850 கிராம் வெள்ளி, அவரை சார்ந்து இருப்பவர்களிடம் 1,450 கிராம் தங்கம் உள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். சுதீஷிடம் 28.16 கோடி ரூபாய் அளவிற்கும், அவரது மனைவியிடம் 19.69 கோடி ரூபாய்க்கும் அசையா சொத்துக்கள் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் எல்.கே.சுதீஷ் பெயரில் 4.72 கோடி ரூபாயும் மனைவி பெயரில் 5.24 கோடி ரூபாயும் கடன் உள்ளதாகவும் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article