Anbil Mahesh: "மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்".. கறாராக சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

10 months ago 7
ARTICLE AD
மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி சென்னை, கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என நாங்கள் கூறுவது பொய் என தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொய் சொல்வாரா?. பள்ளி மாணவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய நாங்கள் இப்படிப்பட்ட தகவலை கூறுவோமா. மத்திய அரசின் தரவுகளின் அடிப்படையில்தான் நாங்கள் அறிக்கை வெளியிடுகிறோம். ஆனால் அது பொய் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது. நிதி விடுவிக்க வரவில்லை என்றால், மத்திய அரசு பணம் வழங்கவில்லை என்றுதானே சொல்ல முடியும். எங்களுக்கு மாணவர்களின் எதிர்காலம் தான் முக்கியம். தயவு செய்து மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம். பலமுறை டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை ரூ.2150 கோடி நிதியை மத்திய அரசிடம் பெற்று தரலாமே?." என கூறினார்.
Read Entire Article