ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன் திருமணம்

ரிலையன்ஸ் குழுமத்தில் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி தம்பதியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி பிரபல தொழிலதிபரான விரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். உலகளவில் அதிக பொருட்செலவில் ஏற்பாடு செய்யப் பட்ட திருமணங்களில் ஒன்றாக இந்த நிகழ்வு கருதப் படுகிறது. திருமணத்திற்கு முன்னதாக பல்வேறு கட்டங்களாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் உலகளவில் பிரபலமான பாப் பாடர்கள் கலந்துகொண்டு இசை மட்டும் நடன நிகழ்ச்சி நடத்தி வருகிறார்கள். கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாப் பாடர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்கிற விவரங்களைப் பார்க்கலாம்

பியான்ஸ் (Beyonce)

முகேஷ் நீட்டா அம்பானியின் மகளான இஷா அம்பானியின் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. இஷா அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் பிரபல பாடகர் பியான்ஸ் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கு ரூ 33 கோடி அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது.

ரிஹானா (Rihanna)

சமகாலத்தில் பாப் பாடகர்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒருவர் ரிஹானா . இவரது பாடல்கள் மட்டுமில்லாமல் வெளிப்படையான அரசியல் கருத்துக்களுக்காகவும் புகழ்பெற்றவர். கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெற்ற ஆனந்த் ராதிகா திருமண கொண்டாட்டத்தில் ரிஹானா கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக அவருக்கு ரூ 74 கோடி சம்பளமாக வழங்கப் பட்டது.

ஏகான் (Akon)

ஜாம் நகரில் நடைபெற்ற இதே நிகழ்ச்சியில் 90 களின் பிரபல பாடகரான ஏகான் கலந்துகொண்டார். இவரது Smack That , Right Now , Lonely , I wanna Love You , உள்ளிட்ட பாடல்கள் மிக புகழ்பெற்றவை. இந்தியாவில் ஏகானின் பாடல்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது . அம்பானி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏகானுக்கு 2 முதல் 4 கோடி வரை சம்பளமாக வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது.

ஜாம் நகரில் நடைபெற்ற இந்த மொத்த நிகழ்ச்சிக்கும் 1200 கோடி செலவிடப் பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ஷகிரா (Shakira)

ஜாம் நகரில் நடந்த கொண்டாட்டத்தைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நவீன் சொகுசு கப்பலில் பிரம்மாண்டமான பார்ட்டி ஒருங்கிணைக்கப் பட்டது. இத்தாலியில் இருந்து தொடங்கிய இந்த கப்பல் பயணம் பிராண்ஸ் நாட்டில் முடிவடைந்தது. நடுக்கடலில் பிரபல பாடகி மற்றும் நடனக் கலைஞரான ஷகிராவின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக அவருக்கு 10 முதல் 15 கோடி வரை சம்பளாக வழங்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேட்டி பெர்ரி (Katty Perry)

ஷகிராவைத் தொடர்ந்து இந்த கப்பல் பயணத்தில் கலந்துகொண்ட மற்றொரு பாப் பாடர் கேட்டி பெர்ரி. இவருக்கும் 45 கோடி சம்பளமாக வழங்கப் பட்டது. நடுக்கடலில் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்திற்கு மட்டும் மொத்தம் 7500 கோடி செலவிடப் பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜஸ்டின் பீபர் (Justin Bieber)

தற்போது வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கையில் மும்பையில் உள்ள அம்பானி குடும்பத்தில் புகழ்பெற்ற வீடான் ஆண்டிலியாவில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் சங்கீத் கொண்டாட்டத்தில் பிரபல பாடகர் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார் . இந்த நிகழ்ச்சிக்கு அவர் 83 கோடி சம்பளாக பெற்றுள்ளாராம்.