AMMA: வரலாற்றை மாற்றிய ஸ்வேதா.. கேரள நடிகர் சங்கத்துக்கு முதல் பெண் தலைவர்!

4 months ago 5
ARTICLE AD

கேரள நடிகர் சங்கத்திற்கு நடந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் முதல் பெண் தலைவர் என்ற அந்தஸ்தையும் அவர் பெற்றுள்ளார். மலையாள திரையுலகில் ரதிநிர்வேதம், களிமண், சால்ட் அண்ட் பெப்பர் போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஸ்வேதா மேனன். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த அவர், பிறகு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் உயர்ந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் போன்று, மலையாளத்திலும் அம்மா (AMMA) என்ற பெயரில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது. சமீபத்தில் அம்மா சங்கத்தில் இருக்கும் நடிகர்கள், பொறுப்பாளர்கள் மீது பாலியல் புகார் எழுந்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு கேரள அரசு தலையிட்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் நடிகைகள் கொந்தளித்தனர். இதற்கு பிள்ளையார் சுழியாக இருந்தது ஹேமா கமிட்டியின் அறிக்கைதான், இதைத்தவிர அம்மா சங்கத்தை சுற்றி பல புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அம்மா சங்கம் 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த சங்கத்தின் வயது கிட்டதட்ட 30 ஆகிவிட்டது. ஆனால், அம்மா கமிட்டியில் செயற்குழு உறுப்பினர்களில் குறைந்தளவே பெண்கள் உள்ளனர் என்ற புகார் எப்போதுமே இருந்துக்கொண்டே இருக்கிறது. தற்போது கலைக்கப்பட்ட குழுவில் கூட 17 செயற்குழு உறுப்பினர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள் எனவும் பேசப்பட்டது.

இந்நிலையில், கேரள நடிகர் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணியில் நடிகர்கள், நடிகைகள் ஈடுபட்டனர். நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனனும், நடிகர் தேவனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஸ்வேதா மீது ஆபாச படங்களில் நடித்து பணம் சம்பாதித்திருப்பதாகக் கூறி சமூக செயற்பாட்டாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தடுத்து பிரச்னைகளை சந்தித்து வந்த ஸ்வேதா மேனன் தற்போது கேரள நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். நடிகர் தேவன் ஸ்வேதா மேனனிடம் தோல்வியடைந்தார். கொச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. வழக்குகள் மற்றும் எதிர்ப்புகளையும் மீறி ஸ்வேதா மேனன் வெற்றி பெற்றுள்ளார். 31 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராகியுள்ளார். பொதுச்செயலாளராக குக்கூ பரமேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article