<h2>அல்லு அர்ஜூன் கைது</h2>
<p>அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. ஹைதராபாதில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் சிறப்பு காட்சியின் போது அங்கு அல்லு அர்ஜூன் திடீர் வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக அல்லு அர்ஜூன் மீது ஹைதராபாத் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக அல்லு அர்ஜூனை இன்று காவல் துறை கைது செய்துள்ளது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லாமல் அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/1000-crore-indian-movies-list-pushpa-2-dangal-baahubali-2-kalki-2898-ad-209520" width="631" height="381" scrolling="no"></iframe></p>