<p>முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாட்டின் முதலமைச்சரின் சகோதரருமான மு.க. அழகிரி , முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்குச் சென்று சகோதரர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலின், நாளை பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.</p>
<p>பல வருடங்களாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் , அவரது சகோதரர் ஸ்டாலினுக்கு இடையே முரண்பாடு காரணமாக , பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், திமுக கட்சியை விட்டும் , அழகிரி ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்,பல வருடங்களுக்கு பிறகு அழகிரி , சகோதரர் ஸ்டாலின் வீட்டிற்கே சென்று, சந்தித்து இருப்பது, அவர்களுக்கு இடையேயான , முரண்பாட்டை நீக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.</p>
<p>மேலும் , மதுரையின் திமுகவின் முகமாக இருந்த வந்த அழகிரி, மீண்டும் திமுக கட்சிக்குள் வந்து , அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தென் மாவட்டங்களில் திமுக வலுப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் பேசப்பட்டு வருகிறது. </p>