Ajithkumar: நடிகர் அஜித்தின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.. ரசிகர்கள் சோகம்!

6 days ago 3
ARTICLE AD
<p>தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான அஜித்குமாரின் தாயார் மோகினி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p> <p>தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவருக்கு அனுப் குமார், அனில்குமார் என இரு சகோதரர்கள் உள்ளனர். இந்த சூழலில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி அஜித்தின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த சூழலில் அஜித்தின் தாயார் மோகினி இன்று உடல்நலக்குறைவால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் அவரது தாயாரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அஜித் தற்போது துபாயில் இருப்பதால் அவர் உடனடியாக சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் தனது 84 வயது மோகினி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அவரது மறைவு செய்தி அறிந்தவுடன் ரசிகர்கள் பலரும் அஜித்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/health-tips-what-happens-if-you-eat-curry-leaves-for-breakfast-260928" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article