AjithKumar: "அவ்ளோ அழகு.. சுத்தி போடுங்க" மீண்டும் இளைஞனாக மாறிய அஜித்! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

1 year ago 17
ARTICLE AD

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்திற்காக அஜித் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இளமையான தோற்றத்தில் அஜித்:

அஜித் கடந்த சில வருடங்களாக தான் நடிக்கும் படங்களில் வெள்ளை நிற முடியுடனே நடித்து வருகிறார். அஜித்தை கருப்பு நிற முடியில் பார்த்து நீண்ட வருடங்களாகிய அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அஜித் குட் பேட் அக்லியில் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர்கள் பலவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த நிலையில், நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கருப்பு முடியுடன் மிகவும் இளமையாக 20 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அஜித் போல காட்சி தருகிறார். அஜித்தின் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் வரவேற்பை பெறும் கெட் அப்:

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் பெயர் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித் மாறுபட்ட கேங்ஸ்டர் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ரியல் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கான அஜித்தின் கெட்டப்புகள் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்திலும் நடிகர் அஜித்தின் இந்த கெட்டப் குட் பேட் அக்லி படத்திற்கானதே என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு ரிலீஸ்?

விடாமுயற்சி படத்திலும், குட் பேட் அக்லி படத்திலும் அஜித்தின் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரு படங்களும் அடுத்தாண்டு அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article