AIADMK Election Manifesto: ஃப்ரிட்ஜ், ரூ.10 ஆயிரம், 3 சிலிண்டர்.. அதிமுக தேர்தல் அறிக்கை டாப் ஹைலைட்ஸ்!

3 weeks ago 2
ARTICLE AD

தமிழ்நாட்டில் தேர்தல் பணிகள் தீவிரமெடுத்துள்ள நிலையில், கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான அதிமுக, தனது இறுதி தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிட்டுள்ளது. இதை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

மொத்தம் 297 அறிவிப்புகள் உள்ள நிலையில், இதன் ஹைலைட்ஸ் குறித்துப் பார்க்கலாம்.

அரிசி அட்டை கொண்ட குடும்பத் தலைவிகளுக்கு இலவசமாக ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.

குல விளக்கு திட்டம் என்ற பெயரில் அனைத்து குடும்ப அட்டை உடைய குடும்பங்களுக்கும் மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும்.

திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்ததை சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்.

ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம் அளிக்கப்படும்.

மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

வீடு இல்லாதவர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.

அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் அரிசியுடன் சேர்த்து, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையின்றி தரப்படும்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இவைபோக,

வீடு இல்லாதவர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் நாட்களை உயர்த்துதல் தற்போதைய 125 நாட்களிலிருந்து 150 நாட்களாக வேலை உறுதித் திட்டத்தை நீட்டிக்கப்படும்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டம் 5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பிற வாக்குறுதிகளும் அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளன.

Read Entire Article