ஐஐடி சென்னை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பைத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றின் நிபுணத்துவத்தை பல்வேறு அம்சங்களில் வளர்க்கச் செய்து தொழில்துறையில் பரந்த அளவில் பயன்பாடுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

ஐஐடி சென்னை, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றில் பிடெக் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024- 25ம் கல்வியாண்டில் இருந்து இதற்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.

என்ஐஆர்எஃப் தரவரிசையில் நாட்டிலேயே நம்பர் ஒன் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனத்தால் வழங்கப்படும் இளங்கலைப் பட்டம், மாணவர்களின் முக்கிய திறன்கள் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை எப்படி?

ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தேர்வு மூலம் இப்பாடத்திட்டத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.