Afg vs Aus Match Preview: ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா ஆப்கான் அணி.. அரையிறுதிக்கு டிக்கெட் பெற போவது யார்?

9 months ago 6
ARTICLE AD

சாம்பியன் டிராபி போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெறும்

சாம்பியன்ஸ் டிராபி தொடர்:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறையில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள்  தகுதிப்பெற்றன. ஆனால் குரூப் பி பிரிவில் இன்னும் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் எவை என்பது இன்னும் தெளிவாகவில்லை. இன்று நடைப்பெறும் முக்கியப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் மோதவுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி:

ஆப்கான் அணி கடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய நம்பிக்கையுடன் களம் காண உள்ளது, கடந்த போட்டியில்   இப்ராஹிம் சத்ரானின் அபாரமான சதத்தால்  ஆப்கானிஸ்தான் அணி  கடுமையாகப் போராடி வெற்றியை உறுதி செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

மறுப்பக்கம் ஆஸ்திரேலிய அணி தனது முதல் 350 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது, ஆனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு சிக்கலாகி உள்ளது. அதனால் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக நிச்சயம் போராடும்.

நேருக்கு நேர்:

இது இந்த அணிகள் இது வரை ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 2023 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த  ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இரு அணிகளும் ஒரு நாள் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும், அந்த போட்டியில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, க்ளென் மேக்ஸ்வெல்லின் இரட்டை சதம் இன்று வரை யாராலும் மறக்கமுடியாது

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் ஒருபோதும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை என்றாலும், கடந்த ஆண்டு நடந்த  டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற விடாமல் செய்தது. அதே போன்ற அறிய வாய்ப்பை தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு கிடைத்துள்ளது.

விளையாடிய போட்டிகள்: 4

ஆஸ்திரேலியா வென்றது: 4

ஆப்கானிஸ்தான் வெற்றி: 0

கடைசியாக மோதியது: ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது (மும்பை; 2023)

மைதானம் எப்படி?

சாம்பியன்ஸ் டிராபியில் கடாபி மைதானம் இரண்டு அதிக ஸ்கோரிங் போட்டிகளை கண்டது. இந்த மைதானத்தில் பந்து வீச்சாளர்களுக்கு பிழைக்கான வித்தியாசம் மிகக் குறைவு. பேட்டர்கள் நடுவில் அதிக நேரத்தை செலவிட்டால் நிறைய ரன்கள் எடுக்க முடியும். முதல் இரண்டு போட்டிகளில், சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 338 ஆகும்.

உத்தேச அணி:

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், ரஷித் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது.

ஆஸ்திரேலியா :

மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (கீப்பர்), அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.

Read Entire Article