Affordable Strong Hybrid: நாட்டின் மலிவான, வலுவான ஹைப்ரிட் எஸ்யுவி - லிட்டருக்கு 28.65 KM மைலேஜ், விலை எவ்வளவு?

4 weeks ago 7
ARTICLE AD

Maruti Victoris Strong Hybrid SUV: நாட்டின் மலிவான மற்றும் வலுவான ஹைப்ரிட் எஸ்யுவி ஆன மாருதி விக்டோரிஸ் எஸ்யுவி லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் மைலேஜ் அளிப்பதாக கூறப்படுகிறது.

நாட்டில் மலிவான, வலுவான ஹைப்ரிட் எஸ்யுவி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், மாருதியின் விக்டோரிஸ் கார் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ப்ராண்டின் ப்ரேஸ்ஸா மற்றும் க்ராண்ட் விட்டாரா கார் மாடல்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப உள்ளது. அதோடு, நாட்டிலேயே மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் வலுவான் ஹைப்ரிட் எஸ்யுவி ஆகவும் விளங்குகிறது. உயர் ரக பாதுகாப்பு மற்றும் மிகச்சிறந்த எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றின் சிறந்த கலவையாகவும் கொண்டாடப்படுகிறது.

மாருதி விக்டோரிஸ் - டிசைன் & வசதிகள்

விக்டோரிஸ் கார் மாடலானது 4 ஆயிரத்து 360 மில்லி மீட்டர் நீளம் மற்றும் 2 ஆயிரத்து 600 மில்லி மீட்டர் வீல்பேஸை கொண்டுள்ளது. இதன் மூலம் ப்ராண்டின் அரேனா பிரிவில் விற்பனை செய்யப்படும் மிகவும் அதிகப்படியான இடவசதி கொண்ட கார்களில் ஒன்றாக விளங்குகிறது. 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் உடன் திவிரமான சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகளையும் கொண்டுள்ளது. ப்ரீமியம் 3 லேயர் டேஷ்போர்டுடன் ப்ளாக் ஐவோரி டூயல் டோன் தீம் உட்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. நேர் எதிராஅன் ஸ்டிட்சிங்குடன் 64 வண்ணங்களிலான ஆம்பியண்ட் லைட்டிங் இடம்பெற்றுள்ளது. பெரிய பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பவர்ட் ட்ரைவர் இருக்கை உள்ளது. பிரிவிலேயே அதிகப்படியான லெக் ரூமை கொண்டுள்ளது.

மாருதி விக்டோரிஸ் - அம்சங்கள், பாதுகாப்பு வசதிகள்

மாருதி ப்ராண்டின் மிகவும் பாதுகாப்பான கார் மாடலாக விக்டோரிஸ் அதிகாரப்பூரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. அனைத்து தரப்புக்குமான பட்ஜெட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகளை நிலையானதாக மாருதி நிறுவனம் வழங்குவது மிகவும் அரிதான நிகழ்வாகும். ரேடார் கேமரா அடிப்படையிலான ADAS தொழில்நுட்பம் என்பது விக்டோரிஸ் மாடலின் தனித்துவமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அடானமஸ் எமர்ஜென்சி ப்ரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் ஆகிய அம்சங்களும் உள்ளன.

மாருதி விக்டோரிஸ் - இன்ஜின் & மைலேஜ்

விக்டோரிஸ் மாடலின் வலுவான ஹைப்ரிட் வேரியண்டானது லிட்டருக்கு 25.65 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே சிறந்த எரிபொருள் செயல்திறன் கொண்ட மிட்-சைஸ் எஸ்யுவி ஆக கொண்டாடப்படுகிறது.

1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்: 102 bhp, 139 Nm (MT/AT/AWD ஆப்ஷன்களுடன்). ARAI தரவுகளின்படி லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ்

வலுவான ஹைப்ரிட்: 140 bhp, e-CVT ஆப்ஷனுடன் 139 Nm. ARAI தரவுகளின்படி லிட்டருக்கு 28.65 கிமீ மைலேஜ்

எஸ்-சிஎன்ஜி: 87 bhp ஆற்றல் (சிஎன்ஜி பயன்முறையில்), ஒரு கிலோகிராமுக்கு 27 கி.மீ. வரை மைலேஜ்

மாருதி விக்டோரிஸ் - விலை விவரங்கள்

விக்டோரிஸ், ரூ.10 லட்சத்திற்கும் சற்று அதிகமான விலையிலிருந்தே தொடங்கி, ஒரு ஆடம்பர காரை சொந்தமாக்கும் வாய்ப்பை அளிக்கிறது.

அடிப்படை வேரியண்டின் விலை (LXi பெட்ரோல் MT): ரூ.10.50 லட்சம்

CNG வேரியண்டின் தொடக்க விலை (LXi CNG): ரூ.11.50 லட்சம்

டாப் எண்ட் வேரியண்ட் விலை (ZXi Plus வலுவான ஹைப்ரிட்): ரூ.19.99 லட்சம்

யாருக்கு விக்டோரிஸ் சரியான தேர்வாக இருக்கும்?

விக்டோரிஸ் காரை ஏன் வாங்கலாம்:

பாதுகாப்பே உங்களது பிரதான எதிர்பார்ப்பாக இருந்தால் பிராண்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த மதிப்பீடு பெற்ற வாகனமாக விக்டோரிஸ் உள்ளது

நகரங்களில் அதிகம் பயன்படுத்துபவர் என்றால் இந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட், போக்குவரத்து நெரிசலில் சத்தமின்றி இருப்பதுடன், ஆண்டுதோறும் உங்கள் எரிபொருள் செலவில் ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்தும்.

அதிகப்படியான விலையின்றி பிரீமியம் அம்சங்களை நீங்கள் விரும்பினால் விக்டோரிஸ் சரியான தேர்வாக இருக்கும்

விக்டோரிஸ் காரை ஏன் வாங்கக் கூடாது?

காரை அதிவேகமாக செலுத்துவது விரும்பும் நபர் என்றால் விக்டோரிஸ் மாடலில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வலுவான டர்போ சக்தி வேண்டுமென்றால், போட்டி கார் மாடல்களை பரிசீலிக்கலாம்.

குடும்பத்தில் உயரமானவர்கள் அடிக்கடி பின் வரிசை இருக்கையில் அமர்ந்து பயணிப்பீர்கள் என்றால் விக்டோரிஸ் கார் சரியான தேர்வாக இருக்க முடியாது

Read Entire Article