இந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் பிரதான தேர்வாக இ ஸ்கூட்டர்கள் மாறி வருகிறது. மின்சார பேட்டரி, நெருக்கடியான நகர்ப்புறங்களில் எளிதாக சென்று வருவது, சுற்றுச்சூழல் மாசு இல்லாதது போன்ற பல காரணங்களால் இதை பலரும் தேர்வு செய்கின்றனர்.

இந்த சூழலில், ரூபாய் 1 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் உள்ள தரமான இவி ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. OLA Gig:

இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள ஓலா நிறுவனம். அவர்களின் மிக குறைந்த விலையில் உள்ள இ ஸ்கூட்டர் OLA Gig ஆகும். இதன் விலை ரூபாய் 33 ஆயிரத்து 906 ஆகும். இந்த இ ஸ்கூட்டர் முதியவர்கள், நடுத்தர வயதினர் வீட்டின் அருகே சென்று வர ஏதுவான இ ஸ்கூட்டர். 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 0.25 கிலோவாட் பேட்டரி கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தாலே 112 கிலோ மீட்டர் வரை செல்லும்.

2. OLA Gig+:

ஓலா கிக் இ ஸ்கூட்டரின் அப்டேட் வெர்சன் இந்த OLA Gig+ ஆகும். இதன் விலை ரூபாய் 45 ஆயிரத்து 579 ஆகும். மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். 157 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 1.5 கிலோவாட் பேட்டரி கொண்டது. ட்ரம் ப்ரேக் கொண்டது.

3. OLA S1 Z:

ஓலா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பாக இருப்பது இந்த OLA S1 Z ஆகும். இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 55 ஆயிரத்து 752 ஆகும். இது S1 Z Standard மற்றும் S1 Z Plus வேரியண்ட் என 2 வேரியண்ட் கொண்டது. S1 Z Plus ரூபாய் 60 ஆயிரத்து 838 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. 146 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 3 கிலோவாட் பேட்டரியை கொண்டது. ப்ளூடூத் வசதியும் கொண்டது.

4. PURE EV ETrance Neo:

இந்த PURE EV ETrance Neo இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 80 ஆயிரத்து 206 ஆகும். இது ETrance Neo SX,
ETrance Neo Standard மற்றும் ETrance Neo Plus என மொத்தம் 3 வேரியண்ட்களை கொண்டது. ETrance Neo SX ரூபாய் 80 ஆயிரத்து 206 எனவும், ETrance Neo Standard ரூபாய் 93 ஆயிரத்து 468 எனவும், ETrance Neo Plus ரூபாய் 1 லட்சத்து 3 ஆயிரத்து 670 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ETrance Neo SX 101 கிலோ மீட்டர் மைலேஜும், ETrance Neo Standard 120 கிலோ மீட்டர் மைலேஜும், ETrance Neo Plus ரூபாய் 150 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 1.8 கிலோவாட் பேட்டரி, 2.5 கிலோவாட், 3 கிலோவாட் பேட்டரிகளை கொண்டது.

5. PURE EV EPluto 7G:

இந்த PURE EV EPluto 7G இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 84 ஆயிரத்து 287 ஆகும். இது EPluto 7G CX, EPluto 7G Standard, EPluto 7G Pro, EPluto 7G Max என 4 வேரியண்ட்களை கொண்டது. இதனா டாப் வேரியண்ட்EPluto 7G Max ரூ.1.22 லட்சம் ஆகும். 1.8 கிலோவாட், 2.5 கிலோவாட், 3 கிலோவாட் மற்றும் 3.5 கிலோவாட் பேட்டரியை கொண்டது இந்த இ ஸ்கூட்டர். 101 கிலோ மீட்டர், 120 கிலோ மீட்டர், 150 கிலோ மீட்டர் என 4 வேரியண்ட்களும் அதன் பேட்டரி தரத்திற்கு ஏற்ப மைலேஜ் தருகிறது.

6. VIDA VX2:

ஹீரோ நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்தான் இந்த VIDA VX2. இதன் விலை ரூபாய் 92 ஆயிரத்து 532 ஆகும். VX2 Go, VX2 Go மற்றும் VX2 Plus ஆகிய 3 வேரியண்ட்கள் உள்ளது. 2.2 கிலோவாட், 3.4 கிலோவாட் பேட்டரிகளைக கொண்டது. VX2 Go 92 கிலோ மீட்டர் மைலேஜும், VX2 Go ரூபாய் 100 கிலோ மீட்டர் மைலேஜும், VX2 Plus 142 கிலோ மீட்டர் மைலேஜும் தரும் ஆற்றல் கொண்டது.