Affordable ADAS Cars: குறைஞ்ச விலைக்கே ADAS - க்ரூஸ் கண்ட்ரோல் டூ ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் - டாப் 5 கார்கள்

1 month ago 4
ARTICLE AD

Affordable ADAS Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ADAS அம்சங்கள் உடன், மலிவு விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கார்களில் ADAS அம்சங்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு (ADAS) மிக வேகமாக பிரபலமடைந்துள்ளது. பல கார் பிராண்டுகள் இப்போது தங்கள் வெகுஜன சந்தை மாடல்களில் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வாரி வழங்குகின்றன. இந்நிலையில் ​​இந்தப் பிரிவில் உள்ள கார்கள் தன்னியக்க ஓட்டுதலின் இரண்டு நிலைகளை வழங்குகின்றன. அதில் லெவல் 1 ஆனது ஃபார்வர்ட் கொலீசன் வார்னிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற ADAS அம்சங்களுடனும்,  லெவல் 2 ஆனது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் போன்ற ADAS அம்சங்களுடனும் வருகிறது. அதிக சாலை விபத்துகளை எதிர்கொள்ளும் நாடாக இந்தியா இருப்பதால், கார்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அந்த வகையில், ADAS கொண்ட கார்களைத் தேடுகிறீர்களானால், இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ADAS அமைப்பை கொண்ட டாப் 5 கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாப் 5 மலிவு விலை கார்கள்:

5. கியா சோனெட்

கியாவின் அண்மைக்கால வெளியீடான சைரோஸில் லெவல் 2 ADAS தொழில்நுட்பமானது ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது. ஆனால், கியா சோனெட் கார் மாடலில்  GTX+ மற்றும் X-Line வேரியண்ட்களில் மட்டும் லெவல் 1 அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. GTX+ டிரிம் முறையே DCT மற்றும் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸுடன் 120hp, 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 116hp, 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், X-Line, டர்போ-பெட்ரோல் மற்றும் DCT கலவையுடன் மட்டுமே வருகிறது. இந்த வேரியண்ட்களின் விலை 13 லட்சத்து 50 ஆயிரத்தில் தொடங்கி 14 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது.

4. ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி காரின் அடிப்படை வேரியண்டான SV-ஐ தவிர்த்து, அனைத்து ஹோண்டா சிட்டி வகைகளிலும் ADAS தொகுப்பு வழங்கப்படுகிறது . இவற்றில் V, VX மற்றும் ZX ட்ரிம்கள் அடங்கும். சிட்டி மாடலின் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் இணைப்புகளைப் பொறுத்தவரை, அதன் மூன்று ட்ரிம்களும் பழக்கமான 121hp, 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் வருகின்றன. மேனுவல் அல்லது CVT  ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படலாம். ADAS சிட்டியின் ஹைப்ரிட் பவர்டிரெயினிலும் கிடைக்கிறது, இது e-CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 12.69 லட்சத்தில் தொடங்கி 19.48 லட்சம் வரை நீள்கிறது.

3. மஹிந்த்ரா XUV 3XO

மஹிந்த்ரா நிறுவனத்தின் XUV 3XO கார் மாடலில் டாப்-ஸ்பெக் AX5 L மற்றும் AX7 L  வேரியண்ட்களில் மட்டுமே லெவல் 2 ADAS பேக்கேஜ் வழங்கப்பட்டுள்ளது. AX5 L வேரியண்டானது 131hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய MT மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆப்ஷன்கள் ஆனது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. அதேநேரம்,  AX7 L மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் கூடுதலாக 1.5-லிட்டர் டீசல் இன்ஜினை  கொண்டுள்ளது. இவற்றின் விலை 11.50 லட்சத்தில் தொடங்கி 14.39 லட்சம் வரை நீள்கிறது.

2. ஹுண்டாய் வென்யு

கியா சோனெட்டை போலவே ஹுண்டாயின் வென்யுவிலும் லெவல் 1 ADAS பேக்கேஜ் இடம்பெற்றுள்ளது. அதிலும் இந்த அம்சமானது டாப் ஸ்பெக்கான  SX(O) ட்ரிம்மில் மட்டுமே கிடைக்கிறது. இது MT/DCT ட்ரான்ஸ்மிஷன் உடன் 120hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் அல்லது மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் 116hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5-லிட்டர் டீசல் இன்ஜினிலும் கிடைக்கிறது. இதன் விலை 11.49 லட்சத்தில் தொடங்கி 12.80 லட்சம் வரை நீள்கிறது.

1. ஹோண்டா அமேஸ்

இந்தியாவில் ADAS உடன் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் கார் என்பதோடு மட்டுமல்லாமல், மூன்றாம் தலைமுறை  ஹோண்டா அமேஸ்  தற்போது 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் இந்த பாதுகாப்புத் தொகுப்பைக் கொண்ட ஒரே செடான் ஆகவும் உள்ளது. டாப்-ஸ்பெக் ZX வகைகளுக்கு இந்த லெவல் 2 பேக்கேஜ் ஒதுக்கப்பட்டுள்ளது. MT மற்றும் CVT விருப்பங்களுடன் 90hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளது. இதன் விலை 9.14 லட்சத்தில் தொடங்கி 10.24 லட்சம் வரை நீள்கிறது.

Read Entire Article