"ADகளில் குழந்தைகளை நடிக்க வைக்காதீங்க" ஆன்லைன் விளையாட்டுகளில் Risk.. ரூல்ஸ் போட்ட மத்திய அரசு!

1 year ago 8
ARTICLE AD

ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 என்பதை வகுத்தது.

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட சட்டவிரோத தகவல்களை அகற்றுவதற்கான விரைவான நடவடிக்கையை உள்ளடக்கிய தங்கள் பொறுப்புணர்வை இடைத்தரகர்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது தொடர்புடைய தகவல்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தலும் இதில் அடங்கும்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் குழந்தைகள்:

மேலும், ஆன்லைன் விளையாட்டு குறைபாடுகளை சமாளிப்பது குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2021-ம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, மத்திய கல்வி அமைச்சகம் ஒரு ஆலோசனையை வழங்கியது. அதைத் தொடர்ந்து, அதே ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி, குழந்தைகளின் பாதுகாப்பான ஆன்லைன் விளையாட்டு குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனையை வழங்கியது.

அதன்படி, எந்த ஆன்லைன் விளையாட்டு விளம்பரமும் 18 வயதுக்குட்பட்ட எவரையும் சித்தரிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

இதுபோன்ற ஒவ்வொரு விளம்பரமும் இந்திய விளம்பர தரநிலைக் கவுன்சில் விதிமுறைக்கு ஏற்ப அச்சு மற்றும் ஆடியோ/வீடியோ விளம்பரங்களில் இந்த விளையாட்டு நிதி இழப்பு ஆபத்தை உள்ளடக்கியது என்று தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

"வெற்றிகரமானவராக சித்தரிக்கக்கூடாது"

விளம்பரங்கள், தங்கள் விளையாட்டுகளை மாற்று வேலை வாய்ப்பாகக் காட்டக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது விளையாட்டு செயல்பாட்டை எந்த வகையிலும் செய்பவர் மிகவும் வெற்றிகரமானவராக சித்தரிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

ஆன்லைன் பந்தய தளங்கள் மற்றும்/அல்லது இந்த தளங்களை பினாமி முறையில் சித்தரிக்கும் எந்தவொரு தயாரிப்பு/சேவையின் விளம்பரங்களையும் வெளியிடுவதையும், ஒளிபரப்புவதையும் தவிர்ப்பதற்காக, சமூக ஊடக தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு 21 மார்ச் 2024 தேதியிட்ட அறிவுரையை தகவல் ஒலிபரப்பு  அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் இந்திய பார்வையாளர்களை குறிவைத்து இதுபோன்ற விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்துறை அமைச்சகம் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை நிறுவியுள்ளது, இது சட்ட அமலாக்க முகமைகளுக்கு ஒரு கட்டமைப்பையும் சூழல் அமைப்பையும் வழங்குகிறது. ஒருங்கிணைந்த முறையில். அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் பொதுமக்கள் புகாரளிக்க, தேசிய சைபர் கிரைம்  போர்ட்டலை (https://cybercrime.gov.in) MHA அறிமுகப்படுத்தியுள்ளது.  இணையப் புகார்களைத் தெரிவிக்கும் வகையில், ‘1930’ என்ற கட்டணமில்லா உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர்  ஜிதின் பிரசாத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read Entire Article