களத்தில் இறங்கும் அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எதிர்கட்சியான அதிமுக, திமுகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் வகையில் களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்த அதிமுக, அடுத்ததாக தேர்தல் அறிக்கை மற்றும் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளது. இன்று மாலை அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது. முன்னதாக ஏற்கனவே 3 கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் பல்வேறு அசத்தலான அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்

குல விளக்கு திட்டம் -அனைத்து குடும்ப அட்டை உடைய குடும்பங்களுக்கும் மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும்.

ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்

வீடு இல்லாதவர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் நாட்களை உயர்த்துதல் தற்போதைய 125 நாட்களிலிருந்து 150 நாட்களாக வேலை உறுதித் திட்டத்தை நீட்டிக்கப்படும்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டம் 5 லட்சம் மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்

மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்.

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டில், வீரர்கள் காளையை பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்

சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி

தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை 4 மணிக்கு அதிமுக அலுவலகத்தில் அடுத்தக்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படவுள்ளது. இதனையடுத்து அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு நாளை முதல் தனது பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூரில் இருந்து தொடங்க இருப்பதாக அதிமுக வட்டார தகவலாக உள்ளது.