Actress Prathyusha : 23 ஆண்டுகள் தாமதிக்கப்பட்ட நீதி...நடிகை பிரத்யுஷா கொலை வழக்கில் இறுதி விசாரணை முடிவு

3 weeks ago 2
ARTICLE AD

திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நடிகை பிரத்யுஷா கொலை வழக்கின் இறுதி விசாரணை கடந்த நவம்பர் 19 தேதி உச்ச நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளன

யார் இந்த நடிகை பிரத்யுஷா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பெரியளவில் கவனமீர்த்தவர் நடிகை பிரத்யுஷா. சிறிய வயதிலேயே தனது தந்தையை இழந்த இவர் தனது அண்ணையில் வளர்ப்பில் வளர்ந்தார். தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு  மிஸ் லவ்லி ஸ்மைல் என்கிற பட்டத்தை வென்றார். இவரது சிரிப்பு அனைவரையும் அவ்வளவு கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 1988 ஆம் ஆண்டு தெலுங்கு சூப்பர்ஸ்டார் மோகன் பாபுவின் படத்தில் அறிமுகமானார் பிரத்யுஷா. தமிழில் தம்பி ராமையா இயக்கிய மனு நீதி படத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சூப்பர் குடும்பம் , தவசி , கடம் பூக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

காதலனுடன் தற்கொலை

பிரத்யுஷாவும்  சித்தார்த் ரெட்டி என்பவரும்  காதலித்து வந்தார்கள். ஆனால் இது சித்தார்த்தின் குடுமத்தினருக்கு பிடிக்காததால் இந்த காதலுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் 2002 ஆம் ஆண்டு சித்தார்த் மற்றும் பிரத்யுஷா இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்ய முயன்றன. இதில் சித்தார் உயிர் தப்பிவிட பிரத்யுஷா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருக்கு அப்போது வயது 22 .

தற்கொலையா ? கொலையா ?

தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக சித்தார்த்த ரெட்டியை ஹைதராபாத் பெருநகர அமர்வு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்து, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இருப்பினும், டிசம்பர் 2011 இல் உயர் நீதிமன்றம் தண்டனையை இரண்டு ஆண்டுகளாகக் குறைத்து, அபராதத்தை ₹50,000 ஆக உயர்த்தியது. தீர்ப்பில் அதிருப்தி அடைந்த பிரதியுஷாவின் தாய் 2012 இல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார், இதன் விளைவாக வழக்குத் தொடர்ந்தார். தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை மகளின் இறப்பு திட்டமிடப்பட்ட கொலை என்றும் அவர் வாதிட்டார்.

இறுதி தீர்ப்பு ஒத்திவைப்பு

பிரத்யுஷா கொலை வழக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய பேசுபொருளானது. கடந்த 23 ஆண்டுகளா அவரது இறப்பு கொலையா தற்கொலையா என்கிற விசாரணையில் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி  இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. நீதிபதிகள் ராஜேஷ் பிந்தல் மற்றும் மன்மோகன் ஆகிய இருவரும் இருதரப்பு வாதங்களையும் கேட்டு இறுதி தீர்ப்பை ஒத்திவைத்துள்ளன. பிரத்யுஷாவின் இறப்பு நீதி கிடைக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Read Entire Article