Aandal Kovil Therottam: "கோவிந்தா கோவிந்தா" கோஷம் விண்ணை பிளக்க..! கோலாகலமாக நடந்த ஆண்டாள் கோயில் தேரோட்டம்

1 year ago 7
ARTICLE AD
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உள்ளூர்வாசிகள், பிற மாவட்டங்களில் இருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பகதர்கள் தேரோட்டத்தை கண்டு களித்தனர். கோவிந்த கோஷம் விண்ணை பிளக்கும் விதமாக ஒலிக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின் போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்கு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை கள்ளழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள் உடுத்தி கலைந்த பட்டு வஸ்திரம், பூமாலை எடுத்து வரப்பட்டது. மஞ்சள் பட்டு உடுத்தி ஆண்டாளும், வெண்பட்டு உடுத்தி ரங்கமன்னாரும் தனித்தனி தோளுக்கினியானியில் புறப்பட்டு தேரில் எழுந்தருளினர். தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
Read Entire Article