90ஸ் கிட்ஸ் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா காதலி.. நாமக்கல்லில் நடந்தது என்ன?

1 week ago 3
ARTICLE AD

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது ப.வேலூர். இந்த ஊர் அருகே அமைந்துள்ளது பாண்டமங்கலம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். தற்போது பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 34 வயதான இவருக்கு வீட்டில் நீண்ட நாட்களாக வரன் தேடி வந்துள்ளனர். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக மகாஸ்ரீ என்ற பெண் பழக்கம் ஆகியுள்ளார்.

இன்ஸ்டா காதல்:

இருவருக்கும் இடையேயான இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மகாஸ்ரீயிடம் அவரைப் பற்றி ஸ்ரீதர் விசாரித்தபோது, அவர் தனக்கும் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், தனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் என்றும், தனது வயது 30 என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்ரீதரிடம் மகாஸ்ரீ வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, தனது வீட்டில் தனது காதலி மகாஸ்ரீ பற்றி பேசியுள்ளார். திருமணத்திற்கு முதலில் ஸ்ரீதர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி நாமக்கல்லில் உள்ள பாண்டமங்கலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஸ்ரீதர் - மகாஸ்ரீ திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் மகாஸ்ரீ உறவினர்கள் வெகு குறைவாகவே பங்கேற்றனர். தங்களது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்ரீதர் மற்றும் மகாஸ்ரீ பதிவிட்டுள்ளனர்.

புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி:

இந்த நிலையில், நேற்று காலை ஸ்ரீதர் வீட்டிற்கு காரில் வந்த சிலர் திடீரென மகாஸ்ரீயை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால், ஸ்ரீதர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மகாஸ்ரீக்கு 30 வயது இல்லை என்றும் அவருக்கு 42 வயது என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், மகாஸ்ரீக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மகளுக்கு 15 வயதும், மகனுக்கு 13 வயதும் ஆகிறது. இதையறிந்த ஸ்ரீதர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மகாஸ்ரீயை தாக்கியது அவரின் முதல் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ஏற்க மறுத்த கணவன்:

கடுமையான அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளான ஸ்ரீதர் மற்றும் அவரது வீட்டார் மகாஸ்ரீயை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர், கடுமையான கைகலப்பு - பிரச்சினைக்குப் பிறகு மகாஸ்ரீக்கு அணிவித்த 5 சவரன் தாலிக்கொடியை திரும்ப பெற்றுவிட்டனர். மகாஸ்ரீயின் மகன் மற்றும் மகள் அவரது பெற்றோரின் பராமரிப்பில் திருநெல்வேலியில் வசித்து வருகின்றனர்.

திருமணமான 3 நாளிலே ஸ்ரீதர் வாழ்வில் அரங்கேறிய சோகம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ப.வேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article