இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Benling Aura:

Benling நிறுவனத்தின் Benling Aura இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவற்றை கீழே காணலாம்.

இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 87 ஆயிரத்து 305 ஆகும். இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வரை செல்லாம். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் வரை ஆகும்.

யுஎஸ்பி சார்ஜிங் வசதி இதில் உள்ளது. ட்ரம் ப்ரேக் வசதி உள்ளது. லோ, இகோ, ஸ்போர்ட் மற்றும் டர்போ ரைடிங் மாேட்ஸ் உள்ளது. 2.88 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் 4 மணி நேரம் ஆகும். இதில் லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 72 வாட்/10 ஏஎஸ் சார்ஜிங் அவுட்புட் ஆகும்.

ஸ்டாண்ட்ர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக், 2 பிஸ்டன் காலிபர், 12 இன்ச் முன்பக்கமும், 12 இன்ச் பின்பக்கமும் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. 165 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி இதில் உள்ளது. 150 கிலோமீட்டர் இந்த இ ஸ்கூட்டர் எடை கொண்டது. 3 வருட அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி வசதி உள்ளது. 1 வருட மோட்டார் வாரண்டி வசதி உள்ளது.

சிறப்புகள்:

டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. ஜிபிஎஸ், மொபைல் போன் கனெக்ஷன் வசதி கிடையாது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் வசதி உள்ளது. ட்ரீப்மீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் அலார்ம் வசதி பார்க்கிங் அசிஸ்ட் வசதி உள்ளது. முகப்புவிளக்குகள், ப்ரேக்/ டெயில் லைட் எல்இடி -யில் உள்ளது. இந்தியாவில் ஓலா, ஏதர் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனை அதிகளவு நடந்து வருகிறது. இந்த இ ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக பல்வேறு நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.