இந்தியாவில் ஹைப்ரிட் கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அந்த வகையில் விரைவில் சில முக்கிய கார் கம்பெனிகள் தங்கள் புதிய SUV மாடல் ஹைப்ரிட் கார்களை களம் இறக்கவுள்ளது அது என்ன என்பதை காணலாம்.

எஸ்யூவி கார்கள்:

எஸ்யூவி கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துகொண்டே உள்ளது. இதற்காக அனைத்து நிறுவனங்களும் தங்களது கார்களை மெருகேற்றி வருகிறது

எஸ்யூவி கார்கள்:

இனி சந்தைக்கு வரவிருக்கும் வாகனங்களில் முக்கிய இடத்தை ஹைபிரிட் தொழில்நுட்பம் பிடிக்கவுள்ளது. காற்று மாசுபாடு கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாகிக் கொண்டிருக்கும் நிலையில், உங்க பட்ஜெட்டுக்கும் எரிபொருள் சேமிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் ஹைபிரிட் வாகனங்களை ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

எலக்ட்ரிக் கார்களில் சார்ஜிங்கில் ஏற்ப்படக்கூடிய குறைப்பாடுகள் மற்றும் ரேஞ்ச் குறைப்பாடுகள் ஆகிய காரணங்களால் எலக்ட்ரிக் கார்கள் மீதான நம்பிக்கை மக்களுக்கு இன்னும் முழுமையாக வரவில்லை. அதனால் ஹைப்ரிட் கார்களையே மக்கள் நாடி வருகின்றனர்.

7 சீட்டர் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர்:

மாருதி சுசுகியின் கிராண்டு விட்டாரா மற்றும் டொயோட்டாவின் அர்பன் க்ரூசர் ஹைரைடர் எஸ்யூவிக்களின் மூன்று வரிசை இருக்கை மாடல்கள் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தற்போது 5 இருக்கை அமைப்பில் வழங்கப்படும் 1.5 லிட்டர் மைல்ட் ஹைபிரிட் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங்க் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின்களையே இவை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் Ni1i எஸ்யூவி:

ஹூண்டாய் நிறுவனம் Ni1i எனும் குறியீட்டுப் பெயரில் புதிய பிரீமியம் எஸ்யூவி ஒன்றை தயாரித்து வருகிறது. ஆல்காசார் மற்றும் டூக்சன் மாடல்களுக்கு இடையிலான இடத்தை நிரப்பும் வகையில் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்படுகிறது. தற்போதைய தகவல் , இந்த எஸ்யூவி 2027ஆம் ஆண்டுக்குள் விற்பனைக்கு வர வாய்ப்பு உள்ளது.

Ni1i மாடலில் பெட்ரோல்-ஹைபிரிட் அமைப்பில் வரும் என தெரிகிறது. தற்போது உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், பெரிய பேட்டரி மற்றும் மின்சார மோட்டாருடன் இணைந்து ஹைபிரிட் அமைப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிசான் எஸ்யூவி:

நிசான் நிறுவனம் இந்திய சந்தைக்காக நடுத்தர அளவிலான புதிய எஸ்யூவி ஒன்றை தயாரித்து வருகிறது. இதன் மூன்று வரிசை இருக்கை மாடலும் அடுத்த கட்டத்துக்குப் பிறகு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு மாடல்களும் அடுத்த தலைமுறை ரெனோ டஸ்டர் அடிப்படையில் தயாரிக்கப்பட உள்ளன. இந்த மாடல்களில் ஹைபிரிட் இன்ஜின் அமைப்பும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.