5 மாதத்தில் 50-க்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தாலும் ஹிட் கொடுத்தது 6 படங்கள் தான்!

6 months ago 5
ARTICLE AD

தமிழ் சினிமாவில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 50-திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. இதில் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரையில் எல்லா படங்களும் அடங்கும். இந்த படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்கள் பற்றிய தகவல் இதோ.

மத கஜ ராஜா & குடும்பஸ்தன்:

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த 'மத கஜ ராஜா' படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இதே போன்று மணிகண்டனின் 'குடும்பஸ்தன்' படமும் வெற்றி வாகை சூடியது.

டிராகன்:

பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி தோல்வியை தழுவியது. இதே போன்று பிப்ரவரியில் திரைக்கு வந்த பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்' வசூலை அள்ளி குவித்து சாதனை படமாக அமைந்தது.

வீர தீர சூரன் 2:

இதைத் பின்னர் மார்ச் மாதம் திரைக்கு வந்த ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன், ரியோ ராஜின் ஸ்வீட் ஹார்ட் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டன. இதே போன்று விக்ரமின் 'வீர தீர சூரன் 2' ரசிகர்களின் வரவேற்பை பெற்றாலும் வசூலில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

குட் பேட் அக்லீ:

பிப்ரவரியில் அஜித்தின் விடாமுயற்சி சொதப்பினாலும் ஏப்ரலில் வந்த 'குட் பேட் அக்லீ' பாக்ஸ் ஆபிஸில் ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்து ஹிட் படமாக அமைந்தது. இந்த ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் குவித்த படமாக இந்தப் படம் அமைந்தது.

டூரிஸ்ட் ஃபேமிலி:

இறுதியாக கடந்த மே மாதம் திரைக்கு வந்த ஸ்மால் பட்ஜேட் படமான சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து திரைக்கு வந்த சூரியின் மாமன் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸாக்கியது மட்டுமின்றி இளசு, சிறுசு பெருசு மத்தியில் அமோக வரவேற்பு கொடுத்தது. மாமனை எல்லோரும் கொண்டாடும் ஒரு படமாக இயக்குநர் கொடுத்தார். குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. அதன் பிறகு வந்த விஜய் சேதுபதியின் ஏஸ் பெரியளவில் சோபிக்கவில்லை. சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு போகவில்லை. சூர்யாவின் ரெட்ரோவும் கலவையான விமர்சனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article