யஷ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான டாக்சிக்: A Fairy Tale for Grown-Ups திரைப்படம், திரையரங்க வசூலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், தற்போது அதன் ஓடிடி உரிமத்திலும் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியீட்டுக்கு முன்பு ரூ.150 கோடி அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட டிஜிட்டல் உரிமத்தின் மதிப்பு, தற்போது ரூ.30 கோடியாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாக்சிக் படத்தை மூத்தோன் புகழ் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யஷ்ஷின் முந்தைய படங்களான கேஜிஎஃப் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்ததால், டாக்சிக் படத்தின் மீதும் ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, பிரம்மாண்டமான தயாரிப்பு, நட்சத்திரப் பட்டாளம் மற்றும் கேங்க்ஸ்டர் கதைக்களம் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன.

ஆனால் படம் வெளியான பிறகு விமர்சனங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. படத்தின் நீளமான ரன்டைம், திரைக்கதையின் அணுகுமுறை, வன்முறைக் காட்சிகள் மற்றும் இரண்டாம் பாதி ஆகியவை விமர்சனத்துக்கு உள்ளாகின. இதன் தாக்கம் படத்தின் வசூலிலும் எதிரொலித்தது. ஆரம்பத்தில் வலுவான ஓப்பனிங் கிடைத்தபோதிலும், அடுத்தடுத்த நாட்களில் வசூல் கணிசமாகக் குறைந்தது. முதல் வார முடிவிலும் படத்தின் வசூல் வேகம் தொடர்ந்து சரிந்தது.

5 மடங்கு குறைந்த ஓடிடி விற்பனை

இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஓடிடி உரிமம் தொடர்பான தகவல் கவனம் பெற்றுள்ளது. டாக்சிக் படத்தின் டிஜிட்டல் உரிமத்துக்கு ஆரம்பத்தில் ரூ.150 கோடி வரை சலுகைகள் இருந்ததாகவும், ஆனால் திரையரங்க வரவேற்புக்குப் பிறகு அந்த மதிப்பு பெருமளவில் சரிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது Zee Studios தரப்பில் இருந்து ரூ.30 கோடி அளவிலான சலுகை மட்டுமே இருப்பதாகவும், மற்ற முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

டாக்சிக் திரைப்படம் 12-வது நாளில் இந்திய நிகர வசூல் ரூ.245.75 கோடியை தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும், படத்தின் மிகப்பெரிய தயாரிப்பு செலவு மற்றும் ஆரம்ப எதிர்பார்ப்புடன் ஒப்பிடும்போது இந்த வசூல் போதுமானதாக இல்லை என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய விவாதமாக உள்ளது.