பல வருடங்களாக சிங்கிளாக சுற்றி வந்த நடிகர் பிரேம்ஜிக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிரேம்ஜியை தங்களது இன்ஸ்பிரேஷனாக வைத்திருந்த பல இளைஞர்களுக்கு இந்த திருமணம் அதிர்ச்சியளித்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்கு முன்பே ஒரே வருடத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் பிரேம்ஜி.

46 வயதில் தந்தையான நடிகர் பிரேம்ஜி

பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி இசையமைப்பாளர் நடிகர் , பின்னணி பாடகர் என பலதிறமைகளை கொண்டவர். பிரேம்ஜியின் நகைச்சுவைக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அஜித் நடித்த மங்காத்தா, கோட், சரோஜா, சென்னை 600028, மாநாடு ஆகிய மாஸ் படங்களில் நடித்துள்ளார். 45 வயது வரை முரட்டு சிங்கிளாகவே இருந்த பிரேம்ஜிக்கும், சேலத்தைச் சேர்ந்த இந்து என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருத்தனி முருகன் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

பிரேம்ஜியை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பலர் சிங்கிளாக சுற்றி வந்த நிலையில் இந்த திருமணம் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. திருமணத்திற்கு பின் தனது மனைவியுடன் ரீல்ஸ் வெளியிடுவது என ஆளே மாறிவிட்டார் பிரேம்ஜி. இப்படியான நிலையில் தான் அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரியவந்தது. குடும்பத்தினர் சூழ அவருக்கு பிரேம்ஜி மனைவி இந்துவுக்கு வளைகாப்பு நடந்தது.

46 வயதில் தந்தையான பிரேம்ஜி

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி பிரேம்ஜி இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தந்து 46 வயதில் பிரேம்ஜி முதல் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். அவருக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன