40 வயது ராம் சரணுக்கு 33 வயது அம்மா... சூர்யாவின் கருப்பு பட நடிகைக்கு வந்த சோதனை

3 months ago 4
ARTICLE AD

மலையாளத்தில் பிரபல நடிகை ஸ்வாசிகா லப்பர் பந்து படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் கவனமீர்த்து வருகிறார். லப்பர் பந்து படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாகவும் நாயகிய சஞ்சனாவிற்கு அம்மாவாக இவர் நடித்திருந்தார். இவரது நடிப்பு பெரியளவில் பாராட்டுக்களைப் பெறவே தற்போது தமிழில் நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு வருகின்றன. ரெட்ரோ , மாமன் படங்களில் நடித்ததைத் தொடர்ந்து அடுத்தபடியாக சூர்யாவின் கருப்பு படத்தில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படத்திலும் ஸ்வாசிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம் சரண் அம்மாவாக நடிக்க மறுத்த ஸ்வாசிகா

லப்பர் பந்து படத்திற்கு பின் தனது தொடர்ச்சியாக அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்புகள் வருவதாகவும். தெலுங்கில் ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க தனது வாய்ப்பு கிடைத்ததாகவும் அதை தான் மறுத்துள்ளதாகவும் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார். "தெலுங்கில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ராம் சரண் நடிக்கும் பெட்டி படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராம் சரண் படத்தில் ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்க என்னை அழைத்தார்கள். ஆனால் தற்போதை சூழலில் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை இதனால் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்' என ஸ்வாசிகா தெரிவித்துள்ளார்

40 வயது மகனுக்கு 33 வயது அம்மாவா!

பொதுவாக சினிமாவில் நடிகர்களுக்கு 70 வயது ஆனாலும் அவர்கள் ஹீரோவாக மட்டுமே நடிக்கிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு திருமணமாகிவிட்டால் அல்லது 40 வயதை கடந்துவிட்டாலே அவர்களுக்கு அம்மா ரோல்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வருவது தான். ஆனால் 40 வயது ராம் சரணுக்கு 33 வயது ஸ்வாசிகாவை அம்மாவாக நடிக்க வைப்பது எல்லாம் ரொம்ப ஓவர் என ரசிகர்களே கடுப்பாகியுள்ளார்கள்.

Read Entire Article