இந்திய பொருட்களுக்கு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ள ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்காக அபராதமும் விதிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், தேசிய நலன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கூறியுள்ளது என்ன.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பு அறிப்பைத் தொடர்ந்து, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பை தாங்கள் கவனத்தில் எடுத்துள்ளதாக கூறியுள்ளது.

இந்த வரி விதிப்பால் ஏற்படும் தாக்கும் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இங்கிலாந்துடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களை போன்று, இந்த விவகாரத்திலும் இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து வடநடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

இந்தியாவிற்கான வரி விதிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நினைவில் கொள்ளுங்கள், “இந்தியா எங்களது நண்பனாக இருந்தபோதிலும், அவர்களது அதிகப்படியான வரி விதிப்புகளால், கடந்த காலங்களில் குறைவான அளவிலேயே வர்த்தகம் செய்துள்ளோம், உலகத்திலேயே அவர்களது வரி தான் மிக அதிகம், அவர்கள் கடினமான, பண வரவில்லாத வர்த்தக தடைகளை கொண்டுள்ளனர் என சாடியுள்ளார்.

மேலும், “அவர்கள்(இந்தியா) எப்போதுமே தங்களுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை அதிக அளவில் ரஷ்யாவிடமே வாங்கியுள்ளனர், மேலும், சீனாவிற்கு இணையாக ரஷ்யாவிடமிருந்து எரிசக்தியை வாங்குகிறார்கள். உக்ரைன் மக்களை ரஷ்யா கொன்று குவித்துவரும இந்த நேரத்தில் இதை செய்கிறார்கள், இதெல்லாம் சரியல்ல, அதனால், ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து, இந்தியா அமெரிக்காவிற்கு 25 சதவீத வரியை வழங்குவதோடு, அபராதமும் கட்டுவார்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. மகா(MAGA-Make America Great Again)“ என்று தனது பதிவில் கூறியுள்ளார் ட்ரம்ப்.

இந்தியா எவ்வளவோ முயன்றும், அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியவில்லை. இந்திய அதிகாரிகள் குழு அமெரிக்காவில் முகாமிட்டு மாதக் கணக்கில் பேசியும் எதுவுமே நடக்கவில்லை. மேலும், இதற்கு மேல் காலக்கெடு நீட்டிப்பு கிடையாது என்று ஏற்கனவே ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்த நிலையில், இந்தியா தற்போது என்ன செய்யப் போகிறது என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்கா சொல்வதையெல்லாம் அப்படியே கேட்க முடியாது என ஏற்கனவே இந்தியா தெரிவித்துவிட்ட நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னவாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.