விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஸ்வேத்தார். அண்மையில் ஆதி என்பவர் ஸ்வேத்தா தனது மனைவி என்று யூடியுப் சேனலில் பேட்டி கொடுத்தார். ஆனால் ஆதி என்கிற நபரை யார் என்றே தெரியாது என்று ஸ்வேத்தா மறுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ஆதி என்கிற நபருடன் தனக்கு 20 வயதில் திருமணம் ஆனதாகவும் அந்த நபரால் தான் மோசடிக்கு ஆளானதாக ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

சீரியல் நடிகை ஸ்வேதா பதிவு

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வேதா " மிக முக்கியமான ஒரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கனவே கூறியபடி, நாங்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டோம் (reg marriage )அப்போது எனக்கு 20வயது மட்டுமே. மிகவும் சின்ன பொண்ண இருந்ததால் அவரைப் பற்றிய பல விஷயங்கள் எனக்கு தெரியாமல் இருந்தது. பின்னர் காலப்போக்கில் ஒவ்வொன்றாக உண்மைகள் தெரிய வந்தன. அவர் தன்னிடம் ஒரு வழக்கே உள்ளது என்று கூறினார். அதை சரி செய்யலாம் என்ற நம்பிக்கையில், அந்த வழக்கிற்காக நான் அதிகமான செலவுகளைச் செய்தேன். ஆனால் இப்போது தான் புரிகிறது அந்த வழக்கைப் பற்றி அவர் கூறிய அனைத்தும் பொய் என்று . அவர்மீது பல வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், இந்த உறவு தொடர இயலாது என்று நான் தெளிவாக தெரிவித்தேன். அதன்பிறகே அவருடைய உண்மையான தன்மை வெளிப்பட்டது. பின்னர் நான் அவரை விட்டு விலகி, என் குடும்பத்துடன் திரும்பி சேர்ந்தேன். காதலித்த காலத்தில், "வியாபாரம் செய்கிறேன்” என்று கூறி, என்னிடமிருந்து பெருமளவு பணமும் நகைகளையும் ஏமாற்றி பெற்றார். நான் அவரை “காதலித்த” காரணத்தினால், அவர் கூறிய அனைத்தையும் நம்பி அவற்றை வழங்கினேன். தற்போது, நான் அவர்மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளேன்; அது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த பிரச்சினையை சட்டப்படி சமாளித்து வருவதால் இதுவரை அமைதியாக இருந்தேன். இப்போது தான் அவர் எவ்வளவு பெரிய மோசடி செய்பவர் என்பது எனக்கு முழுமையாக புரிந்துள்ளது. நான் எடுத்த இந்த முடிவுக்காக மிகவும் பெருமைப்படுகிறேன். இனியும் அவருடன் தொடராமல் விலகியதே சரியான முடிவு என்று.

நானும் அவரை நம்பி காதலித்தேன்; என் காதலின் காரணமாக அவரை முழுமையாக நம்பி, எந்த இடத்திலும் அவரை விட்டுக் கொடுக்காமல், எல்லா மேடைகளிலும் அவரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், என் காதலுக்குத் தகுதியற்றவர் என்பதை அவர் தானே நிரூபித்தார். அவர் பலரையும் இதேபோல் ஏமாற்றியுள்ளார். பலர் பாதிக்கப்பட்டு வருந்தி வருகின்றனர். என்னை ஏமாற்றியதுபோல, மற்றவர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். நான் ஏற்கனவே தெளிவாகவே அவர் ஒரு மோசடி நபர்.யாரும் அவரை நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தும், அவரை நம்பி ஏமாந்து இருக்கிறீர்கள் அவரால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வேலைகளை கூட நிம்மதியாக செய்ய முடியாமல் உள்ளேன்..சமூக ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளேன். நான் விலகிய பின்னரும், வழக்கு தொடர்ந்த பின்னரும் கூட அவர் என்னை தொடர்ந்து கெடந்தாவ செய்து வருகிறார்.எனவே, உங்களையெல்லாம் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அவரை நம்பி யாரும் promotion, photoshoot விளம்பர வேலைகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டாம். என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். இதற்கெல்லாம் அவர் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும். நம்மால் இயன்றதை நாமே செய்வோம்.அதற்கு மேல் கடவுள் நீதியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்தால் மிகுந்த நன்றியாக இருக்கும்.