தமிழ்நாட்டில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியகுமரி ஆகிய 20 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

pic.twitter.com/ENyO0hSame

— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 23, 2025

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு வானிலை

அடுத்த ஏழு தினங்களுக்குவானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்தமிழக கடலோர பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல மேலடுக்கு பகுதிகளில் வழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்பகுதி நிலவுகிறது. இந்நிலையில், நாளை ( 24-04-2025 ) தமிழகத்தில்ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதனை தொடர்ந்து ( 25-04-2025 முதல்29-04-2025 ) ஆகிய நாட்கள் வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read: பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!

Also Read: Video: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு! சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்..25 பேர் பலி: நடந்தது என்ன?

அதிகபட்ச வெப்பநிலை:

21-04-2025 மற்றும்24-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரித இடங்களில் அதிகபட்சவெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் 34:04-2021 மற்றும்24-04-2025: தமிழகம் புதுவை மற்றும் காலை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்சவெப்பநிலை செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் 21-04-2025 முதல்26-04-2021 வரை: அதில் வெப்பவையும் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம், புதுவை மற்றும்பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை :

இன்று (21-042025)வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 செல்சியஸ்ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இதனை தொடர்ந்து நாளை(24-04-2025 ) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36.37 டிகிரி செல்சியஸைஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி ' செய்சியவை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.