2 கிமீ தூரம்! உலகின் குறுகிய விமானப் பயணம்: ஸ்காட்லாந்தில் ஒரு தீவின் ஆச்சரியம்

1 month ago 8
ARTICLE AD

விமானப் பயணம் என்று நாம் நினைக்கும் போதெல்லாம், நாடுகள் அல்லது கண்டங்களைக் கடந்து போவோம், ஆனால் உலகத்தில் ஒரு நாட்டில் வெறும் 2 கிமீ தூரத்திற்கு, விமான சேவை உள்ளது, அதன் விவரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எங்கே உள்ளது?

ஸ்காட்லாந்துக்கு அருகே உள்ள ஓர்க்னி தீவுகளில் உள்ள வெஸ்ட்ரே மற்றும் பாப்பா வெஸ்ட்ரே ஆகிய இடங்களுக்கு இடையிலான இந்த விமானப் பயணம் வெறும் 2.7 கிலோமீட்டர் தூரம் கொண்டது. பல சர்வதேச விமான நிலையங்களின் ஓடுபாதையை விடக் குறைவான தூரம் கொண்ட இடத்திற்கு செல்ல அதிகாரப்பூர்வமாக 90 வினாடிகள் மட்டுமே ஆகிறது. சாதகமான காற்றின் வேகத்தைப் பொறுத்து, வெறும் 53 விநாடிகளில் பயணிகள் தங்கள் இலக்கை அடைந்துவிடுவது குறிப்பிடத்தக்கது.

வரலாறு என்ன?

ஸ்காட்டிஷ் விமான நிறுவனமான லோகனேர் (Loganair) 1967 ஆம் ஆண்டு முதல் இந்தச் சேவையைத் தடையின்றி வழங்கி வருகிறது. இதற்காக 10 இருக்கைகள் கொண்ட 'பிரிட்டன் நார்மன் ஐலேண்டர்' என்ற சிறிய இரட்டை எஞ்சின் விமானம் பயன்படுத்தப்படுகிறது. குறுகிய ஓடுதளங்களில் எளிதாக ஏறி இறங்கும் வசதி கொண்ட இந்த விமானம், உலகின் மிக நீண்ட காலமாக இயங்கும் பிராந்திய விமான வழித்தடங்களில் ஒன்றாகவும் பெருமை பெற்றுள்ளது.

மக்களுக்காக வந்த சேவை:

இந்தச் சேவை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், அங்கு வசிக்கும் 70 முதல் 90 பேர் கொண்ட மக்களுக்காக  இது ஒரு மிக முக்கியமான போக்குவரத்து சாதனமாகும். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அன்றாடம் கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக இந்த விமானத்தையே நம்பியுள்ளனர். ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்குச் செல்ல படகு வசதி இருந்தாலும், அது 25 நிமிடங்கள் எடுப்பதோடு மோசமான வானிலை காலங்களில் இயங்காது என்பதால், விமானமே அவர்களின் உயிர்நாடியாக உள்ளது.

பாலம் அமைப்பதில் உள்ள சவால்கள்

அப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு, கரடுமுரடான காலநிலை மற்றும் மிகக் குறைந்த மக்கள் தொகை காரணமாக, அங்கு பாலம் அமைப்பது பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றது. மிக அதிக செலவில் பாலம் கட்டுவதை விட, இந்தச் சிறிய விமானச் சேவையைத் தொடர்வதே நடைமுறைக்கு உகந்த தீர்வாக உள்ளது.

Read Entire Article