2 ஆயிரம்தான் EMI! ஒரே சார்ஜில் 242 கிலோமீட்டர் மைலேஜ் தரும் OLA S1 X - வாங்கலாமா?

1 week ago 2
ARTICLE AD

இந்தியாவில் நாளுக்கு நாள் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இ ஸ்கூட்டர்களின் தயாரிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இ ஸ்கூட்டர்களின் தயாரிப்பில் முன்னணியில் திகழும் நிறுவனமாக ஓலா நிறுவனம் பல்வேறு இ ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் மிகவும் முக்கியமான படைப்பு OLA S1 X ஆகும்.

இ.எம்.ஐ. எவ்வளவு?

இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வரும் நிலையில், பலரும் பொருளாதார சூழல் காரணமாக தவணை முறையிலே இரு சக்கர வாகனங்கள் வாங்கும் சூழலில் உள்ளனர். OLA S1 X இ ஸ்கூட்டரும் தனது வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ சேவையை வழங்குகிறது.

மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரத்து 128 தவணை முறையில் செலுத்தினால் இந்த OLA S1 X இ ஸ்கூட்டரை வசப்படுத்த முடியும். இதற்கான தவணைக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

விலை என்ன?

இந்த OLA S1 X இ ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் 66 ஆயிரத்து 659 ஆகும், இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரத்து 781 ஆகும். இந்த இஎம்ஐ தொகை வேரியண்டிற்கு ஏற்றாற்போலவும், வாடிக்கையாளர் செலுத்தும் அடிப்படைத் தொகையைப் பொறுத்தும் மாறுபடும்.

வேரியண்ட்கள்:

1. OLA S1 X 2:

இந்த OLA S1 X 2 வேரியண்டடில் 2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 108 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. இதில் அதிகபட்சமாக 101 கிலோமீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. இதை சார்ஜ் செய்ய 5 மணி நேரம் ஆகிறது. இதன் விலை ரூபாய் 66 ஆயிரத்து 659 ஆகும்.

2. OLA S1 X 3:

இந்த OLA S1 X 3 வேரியண்டில் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 176 கிலோமீட்டர் வரை செல்லலாம்.  அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 7.4 மணி நேரம் சார்ஜிங் செய்ய எடுத்துக்கொள்கிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 520 ஆகும்.

3. OLA S1 X 4:

இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரத்து 580. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 242 கிலோமீட்டர் வரை செல்லலாம். அதிகபட்சமாக மணிக்கு 123 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதை சார்ஜ் செய்வதற்கு 6.5 மணி நேரம் ஆகிறது.

4. OLA S1 X Plus:

டாப் வேரியண்டான OLA S1 X Plus இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரத்து 781 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 242 கிலோமீட்டர் வரை செல்லலாம்.  இதில் அதிகபட்சமாக 125 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.  இதை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் ஆகிறது.

இந்த இ ஸ்கூட்டர் கருப்பு, சிவப்பு, நீலம், சாம்பல், வெள்ளை ஆகிய வண்ணங்களில் உள்ளது.

Read Entire Article