2.40 லட்சம் கொடுத்து வாங்க Suzuki V-Strom SX பைக்கில் என்ன இருக்கு! விஷயம் இருக்குது!

5 days ago 2
ARTICLE AD

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களில் சுசுகி நிறுவனத்திற்கு என்று தனி இடம் உண்டு. அவர்களின் இரு சக்கர வாகனங்களும் மிகவும் புகழ்பெற்றது. சுசுகியின் படைப்புகளில் ஒன்று Suzuki V-Strom SX ஆகும்.

இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் என்னென்ன? எப்படி செயல்படுகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

விலை என்ன?

இந்த பைக்கில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. Suzuki V-Strom SX மட்டுமே இதில் உள்ளது. இந்த பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 41 ஆயிரத்து 601 ஆகும். இதில் 249 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் மொத்தம் 6 கியர்கள் உள்ளது. இதன் எடை 167 கிலோ ஆகும்.

இந்த பைக் 12 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி கொண்டது. இதன் இருக்கை 835 மி.மீட்டர் உயரம் கொண்டது. இந்த பைக் கருப்பு, சாம்பல், மஞ்சள், நீலம், சிவப்பு, சாம்பல், அடர் மஞ்சள் வண்ணங்களில் உள்ளது.

மைலேஜ்:

26.1 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 22.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 7 ஆயிரத்து 300 ஆர்பிஎம் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 36 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 1 கியர் கீழேவும், மற்ற 5 கியர்கள் மேலேவும் இயக்க வேண்டும்.

ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 432 கிலோமீட்டர் வரை செல்லலாம். டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது. முன்பக்கம், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் கொண்டது.  அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 19 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது.

சஸ்பென்சன்:

ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக், காயில் ஸ்ப்ரிங், ஆயில் டேமேஜ் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. ரிசர்வ்ட் மோடில் 2.4 லிட்டர் வசதி கொண்டது. 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருட வாரண்டி அளிக்கப்படுகிறது. 3 முறை இலவச சர்வீஸ் உள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி கொண்டது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி கொண்டது.

ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி கொண்டது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர்,  லோ ப்யூல் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி கொண்டது.

செல்ஃப் ஸ்டார்ட் வசதி:

யுஎஸ்பி சார்ஜிங் பாேர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. சைட் ஸ்டாண்ட் இன்ஜின், சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. லொகேஷன் ட்ராக்கிங் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது. ஹாலோஜன் விளக்குகள் உள்ளது.

Read Entire Article