17 வயது சிறுமி 5 மாதம் கர்ப்பம்... கட்டாய கருக்கலைப்பால் உயிரிழந்த சோகம்

3 months ago 4
ARTICLE AD

நர்சிங் கல்லூரி மாணவி

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி , தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 5 - ம் தேதி கல்லூரி சென்ற மாணவி , இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிந்த போலீசார், இரு நாட்களுக்கு பின் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் மீட்டனர். இருவரும் காதலித்து வந்ததும் , மாணவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்ததும் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

கட்டாய கருக்கலைப்பு

திருத்தணி மகளிர் போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் சிறுவன் ஜாமினில் வெளி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மாணவியை அவரது பெற்றோர் கடந்த 13 - ம் தேதி ஆந்திர மாநிலம் பண்ணூர் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் நர்ஸாக பணிபுரியும் வய்லெட் காணிக் ( வயது 52 ) என்பவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது.

திடீர் வயிற்று வலி - உயிரிழப்பு

பின் அங்கிருந்து வீட்டிற்கு வந்தவுடன் 14 - ம் தேதி மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை திருத்தணி தனியார் மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். திருத்தணி மகளிர் போலீசார் கருக்கலைப்பு செய்த வய்லெட் காணிக் உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில், காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கு தொடர்பு கொண்டு மதுபோதையில் பேசிய நபர் காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். பின் , வெடிகுண்டு நிபுணர்கள் காவல் கட்டுப்பாட்டு அறை மட்டுமின்றி , சுற்றியுள்ள அலுவலகங்களையும் சோதனை செய்தனர். இதில் எந்தவித வெடிப் பொருட்களும் கிடைக்காததால் , மிரட்டல் வெறும் போலி என்பது தெரிய வந்தது.

மிரட்டல் விடுத்த நபரின் தொடர்பு எண்ணை வைத்து , எழும்பூர் போலீசார் விசாரித்தனர். இதில் அரியலூரைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் ( வயது 46 ) என்பவர், மதுபோதையில் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. அரியலுார் போலீசார் பிரகதீஸ்வரனை கைது செய்தனர். அதே போல் நேப்பியர் பாலம் அருகே உள்ள இந்திய கடலோர காவல் படை அலுவலகத்திற்கு இ -மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் கடலோர காவல் படை அலுவலகத்திற்கும் , கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க பொதுச்செயலர் பழனிசாமி வீட்டிற்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. மிரட்டல் விடுத்த நபரின் இ - மெயில் முகவரியை வைத்து , அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Entire Article