மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் காரணமாக 15 நாட்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளதால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்து வனத்துறை அறிவித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு , குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது, இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

மேலும் கும்பக்கரை அருவியில் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு மூலிகைச் செடிகள் நடுவில் கடந்து வரும் நீரில் குளிப்பதால் பல்வேறு நோய்களில் மீண்டு வர உதவுவதாக கூறுகின்றனர். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய நீரானது கடும் குளிர்ந்த நிலையில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இயற்கை சூழலில் பசுமை நிறைந்த அடர்ந்த வனப் பகுதிகளுக்கு நடுவில் இந்த அருவி அமைந்துள்ளதால் கும்பக்கரை வனப்பகுதியில் விலங்கினங்கள் காட்டுமாடு, சிறுத்தை, அரிய வகை குரங்கினங்கள், மான், புள்ளி மான், மிளா மான் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்களும் உள்ளன. இந்த அருவியல் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆன மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, வட்டக்காணல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இதனால் கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகளுக்கு அருவியல் குளிக்க தேவைதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்து அறிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் மழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் சுமார் 15 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி என தேவதானப்பட்டி வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.