100 சதவீத வாக்கு... தஞ்சாவூரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

2 weeks ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 பொது மக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்திட வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல் 2026 வக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்  மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுரைக்கிணங்க அன்னை சத்யா விளையாட்டரங்கில் ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் ஆண்களுக்கான ஒட்டப்போட்டி அன்னை சத்யா விளையாட்டரங்கத்திலிருந்து துவங்கி மருத்துவக்கல்லூரி வரை சென்று மீண்டும் அன்னை சத்யா விளையாட்டரங்கம் வந்தடைந்தது.

பெண்களுக்கான ஓட்டப்போட்டி அன்னை சத்யா விளையாட்டரங்கத்திலிருந்து துவங்கி நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வரை சென்று மீண்டும் அன்னை சத்யா விளையாட்டரங்கம் வந்தடைந்தது. மேலும், இப்போட்டியினை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வீரபாண்டியன், தனி துணை ஆட்சியர் சௌமியா, துணை ஆட்சியர் பயிற்சி கமலேஷ்  ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார்,  மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், மேற்கு காவல் ஆய்வாளர்  சுதா, ரெட் கிராஸ் முத்துகுமார்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், போட்டி ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், விளையாட்டு துறை மற்றும் தஞ்சாவூர் தடகள சங்கம் ஆகியோர் இணைந்து செய்திருந்தார்கள். இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சுமார் 150 நபர்களும், பெண்கள் பிரிவில் சுமார் 50 நபர்களும், கலந்துகொண்டார்கள். ஆண்கள் பிரிவில் முதல் பரிசு கௌதம், அரசு மேல்நிலைப்பள்ளி மேம்பாலம், இரண்டாம் பரிசு  அரவிந்மாறன், மூன்றாம் பரிசு  ராபின் மற்றும் பெண்கள் பிரிவில் பிரிவில் முதல் பரிசு பார்கவி தூய வளனார் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர், இரண்டாம் பரிசு பிரித்திகா தூய வளனார் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர், மூன்றாம் பரிசு சிவானி ஸ்ரீ துாய வளனார் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் ஆகியோர் வெற்றி பெற்றதனை தொடர்ந்து பரிகத் தொகை வழங்கப்பட்டது.

மேலும், விளையாட்டரங்கில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களிடையே வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Read Entire Article