10 வருடமா ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சூர்யா செய்துவரும் உதவி...

5 months ago 5
ARTICLE AD
<h2>வேட்டுவம் படப்பிடிப்பில் உயிரிழந்த மோகன்ராஜ்</h2> <p>பா ரஞ்சித் இயக்கிவரும் வேட்டுவம் படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்தது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கார் கிராஷ் காட்சி படப்பிடிப்பின் போது ஸ்டியரிங் மார்பில் மோதியதால் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே மோகன்ராஜ் உயிரிழந்துள்ளார். பெரிய நடிகர்கள் முதல் சின்ன நடிகர்களின் படங்களில் தங்களது உயிரை பனையம் வைத்து பணியாற்றுபவர்கள் சண்டி பயிற்சியாளர்கள். இந்த மாதிரியான விபத்துகள் நடப்பதை தவிர்த்து பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்துள்ளது.</p> <h2>10 வருடமாக சண்டை பயிற்சியாளர்களுக்கு உதவி செய்துவரும் சூர்யா</h2> <p>மோகன்ராஜ் உயிரிழந்ததைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்&zwnj;ஷய் குமார் 650 சண்டை பயிற்சியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் சண்டை பயிற்சியாளர்களுக்கு ரூ 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அக்&zwnj;ஷய் குமாரின் இந்த முன்னெடுப்பு பரவலாக பாராட்டுக்களைப் பெற்றது. இதே முன்னெடுப்பை ஏன் தமிழ் நடிகர் எடுக்கவில்லை என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் நடிகர் சூர்யா குறித்த முக்கியமான தகவல் ஒன்றை ஸ்டண்ட் சில்வா கூறியுள்ளார். " கடந்த 10 ஆண்டுகளாக சண்டை பயிற்சியாளர்களின் மருத்துவ காப்பீட்டிற்கு சூர்யா வருடந்தோறும் &nbsp;ரூ 10 லட்சம் கொடுத்து வருவதாகவும் அவரது இந்த முயற்சியை பார்த்த பின் தான் மற்ற தயாரிப்பாளர்களும் உதவ முன்வந்ததாக ஸ்டண்ட் சில்வா தெரிவித்துள்ளார்&nbsp;</p>
Read Entire Article