கோவை அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கோவை அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கார்த்திக், அவருடைய நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது மாடியில் இருந்து கீழே குதித்ததில் கார்த்திக்குக்கு கை, கால்கள் முறிந்தன.

இதை அடுத்து இரண்டு பேரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறைக்குள் இருந்த போது உணவு சாப்பிட சென்ற நேரத்தில் சக கைதிகள் ஐந்து பேர் சேர்ந்து தட்டு, டம்ளர், கரண்டி உள்ளிட்டவற்றால் கார்த்திக்கை கடுமையாக தாக்கினர். இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே போன்று கார்த்திகை தாக்கிய கைதிகள் ஐந்து பேர் திருச்சி, வேலூர் ஆகிய சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு இடையே சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கார்த்திக், மோகன் ராஜா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.

இதை அடுத்து கோவையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இரண்டு பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கிறது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும் போது ; சிறுமி கொலை வழக்கில் கைதான இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினால், மேற்கொண்டு கூடுதல் தகவல் கிடைக்கும் அது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும் எனவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்ற அனுமதி கொடுத்ததும், இரண்டு பேரையும் காவல் நிலைய எடுத்து விசாரணை நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.