பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச் / ஏப்ரல் 2026-க்கு இதுவரை விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் ஜனவரி 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நடைபெற உள்ள மார்ச் / ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித் தேர்வர்களிடம் இருந்து தட்கல் முறையில் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தட்கல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்

ஏற்கனவே 22.12.2025 (திங்கட்கிழமை ) முதல் 07.01.2026 (புதன்கிழமை ) வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது 09.01.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 10.01.2026 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக வேண்டும்.

எங்கு சென்று?

தனித் தேர்வர்கள், அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தட்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித் தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும், இந்த விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

தேர்வுக் கால அட்டவணை

மார்ச் / ஏப்ரல் 2026, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear)/ மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கால அட்டவணைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.