இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று ரெனால்ட். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு மாதாந்திர தள்ளுபடி அறிவிப்பது வழக்கம்.

ரெனால்ட் தள்ளுபடி:

அந்த வகையில், ரெனால்ட் நிறுவனமும் தனது தள்ளுபடியை அறிவித்துள்ளது. ஜுலை மாத தள்ளுபடியாக ரெனால்ட் எந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அறிவித்துள்ளது? என்பதை காணலாம்.

1. Renault Kiger - ரூபாய் 1.25 லட்சம்

2. Renault Triber - ரூபாய் 60 ஆயிரம்

3. Renault Kwid (2026 MY) - ரூபாய் 15 ஆயிரம்

4. Renault Kwid (Older Stock) - ரூபாய் 30 ஆயிரம்

Renault Kiger:

ரெனால்ட் நிறுவனத்தின் Renault Kiger காருக்கு சப் காம்பேக்ட் எஸ்யூவி காரின் விலை ரூபாய் 6.93 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 12.87 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 1.25 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 23 வேரியண்ட் உள்ளது. இதில் ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 50 ஆயிரம் ஆகும். எக்சேஞ்ச் தள்ளுபடி ரூபாய் 50 ஆயிரம் அல்லது ஸ்க்ரேப்பேஜ் ரூபாய் 25 ஆயிரம் ஆகும். லாயல்டி தள்ளுபடி ரூபாய் 18 ஆயிரம் ஆகும். 999 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் உள்ளது.

2. Renault Triber:

இந்த Renault Triber காருக்கு ரூபாய் 60 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இ்ந்த காருக்கு ரூபாய் 30 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடியாகவும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 30 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 6.93 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 10.31 லட்சம் ஆகும். பெட்ரோல், சிஎன்ஜி என இரண்டு வேரியண்டிலும் ஓடும் இந்த காரில் மொத்தம் 11 வேரியண்ட் உள்ளது.

3. Renault Kwid

நடப்பாண்டில் தயாரிக்கப்பட்ட Renault Kwid (2026 MY) காருக்கு ரூபாய் 15 ஆயிரம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 6 வேரியண்ட் உள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.38 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 6.86 லட்சம் ஆகும். Renault Kwid காரின் பழைய மாடல்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், சிஎன்ஜி வேரியண்ட் இதில் உள்ளது. இந்த காரில் 999 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 68 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 91 என்எம் டார்க் இழுதிறன் உள்ளது.

ரெனால்ட் நிறுவனம் தனது கார்களுக்கு தள்ளுபடி அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.