ஹத்ராஸ் கூட்ட நெரிசல்.. 6 பேர் அதிரடி கைது.. 'போலே பாபா' சாமியாருக்கு குறிவைக்கும் போலீஸ்!

1 year ago 7
ARTICLE AD

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கின்றனர்.

100க்கும் மேற்பட்டவர்களின் உயிரை பறித்த இந்த சம்பவத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. போலே பாபா என்ற சாமியாரின் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வந்த மக்கள், அவரது காலடி மண்ணை எடுக்க முற்பட்டுபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க போதுமான ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்பட இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read Entire Article